நீங்க போட்ருக்க ரூல்ஸ்னால பந்துவீச்சாளர்கள் தான் கஷ்டப்படுவாங்க. கொஞ்சம் கருணை காட்டுங்க – ஐ.சி.சி க்கு வேண்டுகோள் வைத்த பொல்லாக்

Pollock
- Advertisement -

கொரோன வைரஸ் எச்சில் மூலம் பரவுவதன் காரணமாக ஐசிசி இனி விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பந்தில் எச்சில் தடவ கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த முடிவிற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தும், ஒரு சாரார் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த விதிமுறை முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக அமையவுள்ளது என்று பல்வேறு பந்துவீச்சாளர்களும் புலம்பி வருகின்றனர்.

ind

- Advertisement -

மேலும் ஐசிசி இந்த விதியுடன் சேர்த்தே உடல்நலம் சார்ந்த, வீரர்களை கருத்தில் கொண்டு பல முக்கிய விதிகளை அமல்படுத்தியுள்ளது ஐசிசி. இந்த விதியில் ஒன்றுதான் எச்சில் தடவ கூடாது என்ற விதி. பந்தில் எச்சில் தடவவில்லை என்றால் பந்து பெரிதாக ஸ்விங் ஆகாது இதனால் போட்டி பேட்ஸ்மேனுக்கு இன்னும் ஆதரவாக மாறிவிடும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புதிய விதி குறித்து ஏற்க்கனவே பும்ரா மற்றும் ஸ்டார்க் போன்ற வீரர்கள் தங்கள் கருத்தினை நேரடியாக ஐ.சி.சி க்கு தெரியப்படுத்தினர். இப்படி பல முன்னணி பந்துவீச்சாளர்கள் இந்த புதிய விதிக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் போன்றன ஷான் பொல்லாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Pollock 1

கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு கோரனா இல்லை என்று உறுதியாக தெரியும் பட்சத்தில் பந்துவீச்சாளர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவதை அனுமதியளிக்க வேண்டும். ஏனெனில் வீரர்கள் ஏற்கனவே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு பிறகே விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அப்படி விளையாடும்போது உமிழ் நீரை பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதெல்லாம் தவறு.

ballswing

இதனை ஐசிசி மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதேபோன்று உமிழ்நீரை பயன்படுத்த தடை செய்யப்படும் பட்சத்தில் அதற்கு மாற்றாக வேறு சில வேதிப் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு சிலர் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement