இந்தியாவிற்கு நான் வந்ததே இதற்காகத்தான். இதுமட்டுமே எனது இலக்கு – பொல்லார்ட் அதிரடி பேட்டி

Pollard

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது t20 போட்டி முடிந்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டின் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அந்த போட்டி முடித்து பேசிய பொல்லார்ட் நாங்கள் எவ்வாறு பேட் செய்ய வேண்டும் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று போட்டிக்கு முன்னர் ஆலோசித்தோம். அதனைப் போன்றே இந்த போட்டியில் விளையாடி வெற்றி பெற்றோம்.

எங்களது வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். கரீபியன் லீக் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீசிய வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளதால் அவர்களின் செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கிறது. மேலும் இளம் வீரர்களுக்கு கேப்டனாக இருப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன். அவர்களுக்கு என்னுடைய கிரிக்கெட்டையும் நான் கற்றுக் கொடுப்பேன்.

இதேபோன்று நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்த தொடரை கைப்பற்ற முடியும் இந்தியாவிற்கு நான் வந்ததன் காரணமும் அதுதான். இந்த தொடர் வெற்றிபெற நான் கேப்டனான பிறகு எனக்கு வேட்கை அதிகமாகி உள்ளது. இன்னும் சில விஷயங்களை நாங்கள் திருத்திக்கொண்டு மும்பை போட்டியில் வெற்றி பெற ஆவலுடன் உள்ளோம் என்று பொல்லார்ட் கூறியிருந்தார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -