முதல் போட்டியில் கூறிய அதே காரணம். டாஸ் போட்ட உடனே இந்திய அணியின் தோல்வியை உறுதி செய்த – பொல்லார்ட்

Pollard

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் தற்போது துவங்கியுள்ளது.

ind vs wi

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்திய அணியில் இருந்து ஷிவம் துபே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துள் தாகூர் இடம் பெறுவதாக அறிவித்துள்ளார்.

டாஸ் முடிந்த பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறியதாவது : இந்த மைதானம் எவ்வாறு செயல்படும் என்று தெரியவில்லை. இதனாலேயே நாங்கள் சேசிங்கை தேர்வு செய்கிறோம். ஏனெனில் இதே போன்று முதல் போட்டியில் நாங்கள் சேசிங் செய்த போது மைதானம் எங்களுக்கு உதவியது. அதையே நாங்கள் இந்த போட்டியிலும் செய்ய நினைக்கிறோம்.

IND

இந்தப் போட்டியிலும் இரண்டாவதாக விளையாட விரும்புகிறேன் என்று பொல்லார்ட் கூறினார். இதன் மூலம் முதல் போட்டியில் எடுத்து அதே முடிவு எடுத்து மீண்டும் இந்திய அணியின் தோல்வி உறுதி செய்யும் விதமாக பேசி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்திருக்கிறார் கேப்டன் பொல்லார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -