பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 வகையிலும் சாதனை படைக்க காத்திருக்கும் பொல்லார்டு – அசத்தல் விவரம் இதோ

pollard

இந்தியாவில் நடைபெறவுள்ள 14வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் வீரரும், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த அதிரடி வீரருமான பொல்லார்டு பல்வேறு சாதனைகளை இந்த தொடரில் படைக்க காத்திருக்கிறார். அவற்றை பற்றிய விவரத்தையே இந்த பதிவில் காண உள்ளோம்.

Pollard

ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்தில் இருந்து மும்பை அணியில் மட்டுமே விளையாடி வரும் இவர் மும்பை அணியில் ஒரு முக்கிய வீரராக பல வருடங்களாக அங்கம் வகித்து வருகிறார். இந்நிலையில் இந்த தொடரில் ஏகப்பட்ட சாதனைகளை அவர் நிகழ்த்துவதற்காக காத்திருக்கிறார். குறிப்பாக பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங், பீல்டிங் என மூன்று பிரிவுகளில் அவர் தனித்தனி சாதனைகளை படைக்க உள்ளார்.

அதன்படி பேட்டிங்கில் இன்னும் இரண்டு சிக்சர்கள் அடிப்பதன் மூலம் அவர் 200 சிக்சர்களை விளாசிய 6 ஆவது வீரராக திகழ்வார். இதற்கு முன்னர் ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் (349), டிவில்லியர்ஸ் (235), தோனி (216), ரோகித் சர்மா (213), கோலி (201) சிக்ஸர்களை அடித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து 198 சிக்சர்களுடன் 6 வது இடத்தில் உள்ளார். இன்னும் 2 சிக்சர்களை அடிப்பதன் மூலம் அவர் 200 சிக்சர்களை ஐபிஎல் தொடரில் அடித்து சாதனை படைக்க உள்ளார்.

Pollard 1

அதற்கடுத்து இன்னும் 4 பவுண்டரிகளை அவர் ஐபிஎல் தொடரில் அடிப்பதன் மூலம் 200 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் 196 பவுண்டரிகளை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு பவுலராக கிரிக்கெட்டில் 300 டி20 விக்கெட்டுகளை வீழ்த்த அவருக்கு இன்னும் 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் அவர் 300 டி20 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைக்க உள்ளார்.

- Advertisement -

Pollard

அதுமட்டுமின்றி பீல்டிங்கில் இதுவரை ஐபிஎல் தொடரில் 90 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார். மேலும் பத்து கேட்ச்களை இந்த தொடரில் பிடிப்பதன் மூலம் 100 கேட்ச்களை பிடித்த வீரராகவும் அவர் சாதனை படைக்க உள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளை உலகளவில் படைத்து வரும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.