இவருக்காக இந்திய அணியில் இடமில்லை. அவருக்கும் இந்த மனசு கஷ்டம் இருக்கும் – பொல்லார்ட் ஓபன் டாக்

pollard

மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார். முதன்முதலாக 2014ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதன் பின்னர் கடந்த ஐந்து வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். தொடர்ந்து சீரான இடைவெளியில் சில தொடர்களில் தனது பெயரை மீண்டும் மீண்டும் உலகிற்கு காட்டிக் கொண்டே இருக்கிறார்.

SKY

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியிலும் கூட 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார் இதில் 10 பவுண்டரிகளும் 3 சிக்சர்கள் அடங்கும். ஒவ்வொரு முறையும் புதிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போது இவர் போன்ற சில வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஆனால் இந்தமுறை அறிவிக்கப்பட்ட அணிகளில் இவரது பெயர் இடம் பெறவில்லை.

இந்த தொடரிலும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தங்கராசு நடராஜன், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் போன்ற இளைஞர்கள் வாய்ப்பு பெற்றனர். ஆனால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததை எதிர்த்து ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற மும்பை வட்டாரத்தைச் சேர்ந்த வர்ணனையாளர்கள் விமர்சனத்தை பதிவு செய்தனர்.

Surya kumar 1

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கெரோன் பொல்லார்ட் வெகு சீக்கிரத்தில் சூரியகுமார் இந்திய உடை அணிந்து ஆடப் போகிறார் என்று தெரிவித்திருக்கிறார் இதுகுறித்து அவர் கூறுகையில்….

- Advertisement -

இந்திய அணியில் இடம்பிடிக்காதது அவருக்கு வருத்தமாகவே இருக்கும். எப்போதாவது இந்திய அணியில் இடம் பிடித்து விடுவார் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார். ஆனால் காலம் கனிய வேண்டும் அப்போதுதான் அவருக்கும் இடம் கிடைக்கும். வெகு சீக்கிரத்தில் அவரும் இந்திய அணிக்காக ஆடப் போகிறார் என்று தெரிவித்துள்ளார் கெரோன் பொல்லார்ட்.