இந்திய அணியிடம் நாங்கள் தோல்வி அடைய இதுவே காரணம் – பொல்லார்ட் பேட்டி

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.

kohli 3

- Advertisement -

பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கோலி ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறியதாவது : 208 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன்களே மேலும் இந்த ரன்களை வைத்து இந்திய அணியை சுருட்டி இருக்கலாம் ஆனால் நாங்கள் எந்த இடத்தில் போட்டியை தோற்றம் என்றால் பந்துவீச்சில் நிறைய உபரி ரன்களை விட்டுக் கொடுத்தோம். மேலும் எங்கள் பந்துவீச்சும் சற்று மோசமாக இருந்தது.

Kohli 1

நாங்கள் ஏற்கனவே வைத்திருந்த திட்டத்தை மாற்றியதால் ஏற்பட்ட விளைவுதான் இந்த தோல்வி. இந்த மைதானம் பேட்டிங்க்கு நன்றாக ஒத்துழைத்தது பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் ஆனால் பந்து வீச்சில் எங்களது தோல்வி உறுதியானது. ஹெட்மையர் மற்றும் லீவிஸ் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அடுத்த போட்டியில் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெறுவோம் என்று பொல்லார்ட் கூறினார்.

Advertisement