சென்னை அணியை பொளந்து கட்ட நான் வைத்திருந்த பிளான் இதுதான் – ஆட்டநாயகன் பொல்லார்டு பேட்டி

pollard

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 27 வது லீக் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய சென்னை அணி 218 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியும் மும்பை அணி அதனை தங்களது 20 ஆவது ஓவரில் சேஸிங் செய்து 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக ராயுடு அமர்க்களமான ஒரு இன்னிங்சை விளையாட மும்பை அணி சார்பாக பொல்லார்ட் அதைவிட ஒரு சூப்பரான இன்னிங்சை விளையாடி மும்பை அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

இந்த போட்டியில் 34 பந்துகளை சந்தித்த பொல்லார்ட் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் என 87 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் பொல்லார்ட் கூறுகையில் : நான் கடவுளுக்கும் எனக்கு அங்கிள் ஸ்டீவனுக்கும் நன்றி சொல்லி சொல்லிக்கொள்கிறேன். மேலிருந்து அவர்கள் எனக்கு கொடுக்கும் திறமையும், தைரியமும் தான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

பந்துவீசும் போது மொயின் அலி ஆட்டம் இழந்து வெளியேறியதும் அந்த நேரத்தில் பந்துவீச வருவது சரியான முடிவு என நினைத்தேன். அதன்படி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமாக இருந்தது. அது மட்டுமன்றி பேட்டிங்கின்போது எனது திட்டம் மிக தெளிவாக இருந்தது. அதாவது நான் களம் இறங்கும் போது 4 ஓவர்கள் ஸ்பின் இருந்ததால் அதனை அடித்து விளையாட வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

pollard

இந்த மைதானம் சிறிய மைதானம் என்பதால் ஸ்பின்னரை அட்டாக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதே போன்று ஸ்பின் ஓவர்கள் 2 மட்டுமே எனக்கு கிடைத்தன. அந்த ஓவரில் ஜடேஜாவை எதிர்த்து பெரிய அளவில் ரன்களை குவித்தேன். ஒவ்வொரு ஓவரிலும் 2 சிக்சர்கள் அடிக்கும்போது ஆட்டம் எங்கள் பக்கம் இருக்கும் என நினைத்தேன். அதன்படி நிறைய பயிற்சிகள் எடுத்தது இதுபோன்ற சிக்ஸர்களை விலாச உதவியது.

- Advertisement -

pollard 1

நான் 360* ப்ளேயர் என்று என்னை கூறிக் கொள்ள மாட்டேன். ஆனால் மைதானத்தில் இருக்கும் பல திசைகளுக்கும் என்னால் பந்துகளை விளாச முடியும் என்று கூறுவேன். மேலும் இறுதி ஓவரில் 6 பந்துகளையும் நானே சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு குல்கர்னியும் ஒத்துழைப்பு கொடுத்தார். இதன் காரணமாக அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் மகிழ்ச்சி என பொல்லார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.