நாங்கள் செய்த இந்த தப்பு தான் இந்தியாவுக்கு எதிரா இப்படி மோசமாக தோக்க காரணம் – பொல்லார்டு வருத்தம்

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கைரன் பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது.

Pooran

- Advertisement -

அப்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்களை மட்டுமே குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக துவக்க வீரர் கையில் மேயர் (31) மற்றும் மூன்றாவது வீரராக களமிறங்கிய பூரான் (61) தவிர்த்து மற்ற எந்த வீரரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

இதன் காரணமாக அவர்கள் 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்கள் மட்டுமே குவித்தனர். பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா 19 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து சிறப்பான அடித்தளத்தை அமைதார்.

venky

அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் எளிதாக வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தனர். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்த போதிலும் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும், வெங்கடேஷ் ஐயர் 24 ரன்களுடனும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் தோற்றதற்கு முதலில் மோசமாக பேட்டிங் செய்ததே காரணம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக 6 முதல் 15 ஆகிய 9 ஓவர்களில் நாங்கள் 46 ரன்கள் மட்டுமே குவித்ததோம். அந்த இடைவெளியில் மேலும் 18 முதல் 20 ரன்கள் நாங்கள் குவித்திருக்கும் பட்சத்தில் இந்த போட்டியில் போராட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இதையும் படிங்க : அவரிடம் நல்ல திறமை இருக்கு. அவரோட எதிர்காலமும் பிரைட்டைடா இருக்கு – இளம்வீரரை வாழ்த்திய ரோஹித்

அதேவேளையில் இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி முதல் 6 ஓவர்களிலேயே நல்ல துவக்கத்தை பெற்றது. இருப்பினும் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பீல்டர்கள் ஆகியோர் ஆட்டத்தை திருப்பினர். இறுதியில் சில தவறுகள் நடந்து வெற்றி அவர்களிடம் சென்றாலும் நாங்கள் அந்த தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் விரைவில் திரும்புவோம் என பொல்லார்டு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement