வீடியோ : ஹெல்மெட்டில் பட்டு பவுண்டரி சென்ற பந்து. கை காட்டி வழியனுப்பிய பொல்லார்ட் – வைரலாகும் வினோதமான வீடியோ

Pollard
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டி டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் பட்லர்(41) மற்றும் சாம்சன்(42) ஆகியோரது உதவியால் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது.

sanju

- Advertisement -

மும்பை அணி சார்பாக ராகுல் சாகர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா(14) மற்றும் சூர்யகுமார் யாதவ்(16) ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் டிகாக்(70) மற்றும் க்ருனால் பாண்டியா(39) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக 18.3 ஓவர்களில் 172 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது க்ருனால் பாண்டியா ஆட்டம் இழந்ததும் பொல்லார்ட் பேட்டிங் செய்ய வந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு கொண்டு சென்ற பொல்லார்ட் இந்த போட்டியில் கிறிஸ் மோரிஸ் வீசிய ஒரு பந்தில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார். பந்து ஷாட் பிட்ச் என்பதனால் அதனை எதிர்கொள்ள முடியாமல் குனிந்த பொல்லார்ட் பந்து மேலே செல்லும் என்று எதிர்பார்த்தார்.

dekock 1

ஆனால் அதிவேகத்தில் வந்த பந்து நேராக அவரது ஹெல்மெட்டில் பட்டு லெக் சைடில் பவுண்டரி நோக்கி சென்றது. அதனை பார்த்த பொல்லார்ட் பந்தை பவுண்டரிக்கு செல்லும்படி போ போ என்று கூறுவது போல கை அசைத்தார். இந்த வீடியோ பார்ப்பதற்கு சற்று வினோதமாக இருந்தாலும் ரசிக்கும்படி இருப்பதனால் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ :

Advertisement