ரோஹித் சர்மா எப்போது மும்பை அணியில் இணைந்து விளையாடுவார் – பொல்லார்ட் அளித்த தகவல்

pollard

மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் காயமடைந்தார். அதன் பிறகு அவர் மும்பை அணியில் விளையாடவில்லை. இடது கால் தொடையில் ஏற்பட்டுள்ள இந்த காயம் காரணமாக அவர் அடுத்த சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் நேற்று டெல்லி அணிக்கெதிராக நடந்த போட்டியிலும் அவர் விளையாட வில்லை.

rohith

பொல்லார்ட் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் அது குறித்து கருத்து வெளியிட்ட பிசிசிஐ : ரோகித் சர்மாவை மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருவதாகவும் காயத்தின் தன்மையைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மும்பை அணியின் நிர்வாகம் சார்பாக ரோஹித் சர்மா பயிற்சி செய்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது நேற்றைய போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா குறித்த ஒரு முக்கிய தகவலை மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் பகிர்ந்து கொண்டார்.

rohith 1

அதன்படி அவர் கூறியதாவது : ரோகித் சர்மா காயத்தில் இருந்து கிட்டத்தட்ட மீண்டு விட்டார் என்றும் விரைவில் அவர் மும்பை அணியில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். அவர் கூறியதை வைத்து பார்க்கும்போது அவர் லீக் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

rohith 2

மும்பை அணிக்கு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. அதன்பிறகு பிளேஆப் சுற்றில் விளையாட உள்ளது. எனவே தற்போது மும்பை நல்ல நிலையில் இருப்பதால் நிச்சயம் பிளேஆப் சுற்றில் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது.