Kieron Pollard : துல்லியமான த்ரோ மூலம் ஏபி டிவில்லியர்ஸை ரன் அவுட் செய்த – பொல்லார்ட் வீடியோ

நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரராக டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 75 ரன்களை அடித்தார். அதிலும் குறிப்பாக நேற்று பழைய பாணியில் ஆடிய

ABD-3
- Advertisement -

நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரராக டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 75 ரன்களை அடித்தார். அதிலும் குறிப்பாக நேற்று பழைய பாணியில் ஆடிய டிவில்லியர்ஸ் மலிங்கா வீசிய ஒரு பந்தினை முட்டி போட்டு லெக் சைட் பின் திசையில் அபாரமாக சிக்ஸ் அடித்தார். அதன்பிறகு 20 ஓவரில் இரண்டாவது பந்தில் இரண்டு ரன் ஓட ஆசைப்பட்ட டிவில்லியர்ஸ் பொல்லார்ட்டின் துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 31 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 75 ரன்களும், மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்களும் குவித்தனர்.

பிறகு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிகாக் 40 ரன்களும், கடைசி நேரத்தில் பாண்டியா அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். மலிங்கா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement