காற்றில் பறந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த பொல்லார்ட் – வைரல் வீடியோ

- Advertisement -

நேற்று இரவு நடந்த மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி வீரர் பொல்லார்ட் டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த பந்தினை கவர் திசையில் இருந்து காற்றில் பறந்தவாறு ஒற்றை கையில் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். இதனை எதிர்பாராத ஐயர் அதிர்ச்சியுடன் நடையை கட்டினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

பொல்லார்ட் பிடித்த இந்த கேட்ச் மும்பை அணி வீரர்களை வியக்கவைத்தது. பீல்டிங்கில் எப்போதும் சிறப்பாக செயல்பட்டுவரும் பொல்லார்ட் நேற்றைய போட்டியிலும் கலக்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி நேருகிறது. மேலும், இந்த விடீயோவினை கிரிக்கெட் ரசிகர்கள் பெருமளவில் சம்மோக வலைத்தளத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது. இதனால், 214 ரன்கள் மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Delhi

அடுத்து ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா சிறப்பாக பந்துவீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 27 பந்துகளில் 78 ரன்களை அடித்த டெல்லி அணி வீரர் பண்ட் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement