3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாத ஒருவரை கேப்டனாக மாற்றிய – வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம்

WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணியுடனான தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் உலக கோப்பை தொடரில் கூட 10 போட்டிகளில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

WI 1

- Advertisement -

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டனை மாற்ற தற்போது அந்த அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இதுநாள்வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹோல்டர் தற்போது கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்த பிராத்வொயிட் அவரையும் நீக்கி அதிரடி காட்டியுள்ளது.

புதிய கேப்டனாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மூன்று ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடாத பொல்லார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக 2016ம் ஆண்டு அணியில் விளையாடினார். அதன் பிறகு கடைசியாக நடந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடினார். இந்நிலையில் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Pollard

ஏனெனில் மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாத ஒருவரை அணி நிர்வாகம் எப்படி தேர்வு செய்தது இது ஒரு முட்டாள்தனமான முடிவு என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதிரடி வீரர்கள் பலர் அந்த அணியில் இருந்தும் அந்த அணி சாதிக்க தவறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement