CSK vs MI : பேட்டை தூக்கி எரிந்து அம்பயரை முறைத்தபடி நடந்து சென்ற பொல்லார்ட் – விவரம் இதோ

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்

Pollard
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 19-வது ஓவரை சென்னை அணி பந்து வீச்சில் ரன்களை குவிக்க கஷ்டப்பட்டு வந்தது. பொல்லார்ட் மட்டும் ஓரளவு சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான முக்கியமான 41 ரன்களை அடித்தார். இந்த முதல் இன்னிங்சில் 19 ஆவது ஓவர் முடிவில் மும்பை அணி 140 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது ஆட்டத்தின் முடிவை மாற்றும் 20 ஆவது ஓவரை சென்னை அணியின் பிராவோ வீசினார்.

- Advertisement -

அந்த 20 ஆவது ஓவரில் அதிரடியாக ரன்களை குவித்தால் மட்டுமே அதிகமான இலக்கை நிர்ணயிக்க முடியும் என்று நினைத்த பொல்லார்ட் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட நினைத்தார். ஆனால் முதல் 2 பந்துகளை சிறப்பாக வீசிய பிராவோ ரன்களை கொடுக்கவில்லை. மேலும் மூன்றாவது பந்தை வைடாக ஆப் சைடில் வீசினார். அந்த பந்து வைட் என்று சரியாக கணித்து பந்தை அடிக்காமல் விட்டார் பொல்லார்ட்.

ஆனால் அந்தப் பந்தினை கவனித்த அம்பயர் அந்தப் பந்தை வைட் கொடுக்காமல் விட்டார். இந்தப் போட்டியை பார்த்த அனைவருக்கும் அது வைட் என்பது தெளிவாக தெரியும். ஆனால் அம்பயர் ஏன் அதனை வைட் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. இதனால் எரிச்சலாகி மிகுந்த கோபமடைந்தார் பொல்லார்ட். இதோ அந்த வீடியோ :

மேலும் அவரை நோக்கி கோபமாக பார்த்தபடி பேட்டை மேலே தூக்கி எறிந்தார். அதுமட்டுமின்றி அடுத்த பந்தில் வைட் திசையில் நின்று கொண்டிருந்தார் பொல்லார்ட். அதை கவனித்து பிராவோ பந்துவீச ஓடிவந்தார் கிரீஸின் அருகில் வரும்போது பொல்லார்டு மைதானத்தை விட்டு நகர்ந்து சென்றார். பொல்லாரின் தொடர்ச்சியான இந்த செயல்களை கவனித்த அம்பயர் அவரின் அருகில் சென்று எச்சரிக்கை செய்தனர். இறுதி ஓவரில் இந்த சூழல் மைதானத்தில் இருந்தவர்களை அதிர வைத்தது இந்த தொடரில் தொடர்ச்சியாக அம்பயர்கள் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement