- Advertisement -
ஐ.பி.எல்

CSK vs MI : ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பொல்லார்டுக்கு அபராதம் விதித்து அதிரடி காட்டிய – ஐ.பி.எல் நிர்வாகம்

சென்னை அணிக்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியில் 20 ஆவது ஓவரில் அதிரடியாக ரன்களை குவித்தால் மட்டுமே அதிகமான இலக்கை நிர்ணயிக்க முடியும் என்று நினைத்த பொல்லார்ட் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட நினைத்தார். ஆனால் முதல் 2 பந்துகளை சிறப்பாக வீசிய பிராவோ ரன்களை கொடுக்கவில்லை. மேலும் மூன்றாவது பந்தை வைடாக ஆப் சைடில் வீசினார். அந்த பந்து வைட் என்று சரியாக கணித்து பந்தை அடிக்காமல் விட்டார் பொல்லார்ட்.

ஆனால் அந்தப் பந்தினை கவனித்த அம்பயர் அந்தப் பந்தை வைட் கொடுக்காமல் விட்டார். இந்தப் போட்டியை பார்த்த அனைவருக்கும் அது வைட் என்பது தெளிவாக தெரியும். ஆனால் அம்பயர் ஏன் அதனை வைட் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. இதனால் எரிச்சலாகி மிகுந்த கோபமடைந்தார் பொல்லார்ட்.

- Advertisement -

மேலும் அவரை நோக்கி கோபமாக பார்த்தபடி பேட்டை மேலே தூக்கி எறிந்தார். அதுமட்டுமின்றி அடுத்த பந்தில் வைட் திசையில் நின்று கொண்டிருந்தார் பொல்லார்ட். அதை கவனித்து பிராவோ பந்துவீச ஓடிவந்தார் கிரீஸின் அருகில் வரும்போது பொல்லார்டு மைதானத்தை விட்டு நகர்ந்து சென்றார். பொல்லாரின் தொடர்ச்சியான இந்த செயல்களை கவனித்த அம்பயர் அவரின் அருகில் சென்று எச்சரிக்கை செய்தனர். இறுதி ஓவரில் இந்த சூழல் மைதானத்தில் இருந்தவர்களை அதிர வைத்தது.

பொல்லார்ட் செய்த இந்த ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக அவர் மீது அம்பயர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள். எனவே இதன் காரணமாக அம்பயர்களை எதிர்த்துச் செயல்பட்ட பொல்லார்ட்டின் இந்த நடத்தை விதிமுறை மீறல் காரணமாக அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by