திடீரென இரண்டாவது போட்டியில் இருந்து கேப்டன் பொல்லார்டு வெளியேற்றப்பட என்ன காரணம் – நடந்தது என்ன?

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து 2-வது ஒருநாள் போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.

INDvsWI

- Advertisement -

இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலாவதாக விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 193 ரன்கள் மட்டுமே குவித்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பாக 12 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான பொல்லார்டு விளையாடாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் இந்த போட்டியில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரரான பொல்லார்டு எவ்வளவு பெரிய மேட்ச் வின்னர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பொல்லார்டை நீக்கிவிட்டு வேறு ஒரு வீரரை இந்த இரண்டாவது போட்டியில் சேர்க்க என்ன காரணம் என்பது குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

Pollard

இந்த இரண்டாவது போட்டியில் பொல்லார்டுக்கு பதிலாக கேப்டனாக நிக்கலஸ் பூரன் செயல்பட்டார். மேலும் பொல்லார்டுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதாலும், இன்றைய போட்டியில் விளையாடும் அளவிற்கு அவர் உடற்தகுதியுடன் இல்லை என்பதனாலும் விளையாடவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு பின் வேறு கதை உள்ளது என்பது போன்ற ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. அந்த தொடரில் மூன்று போட்டிகளில் பேட்டிங் செய்த பொல்லார்டு 4 ரன்கள் மட்டுமே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் இளம் வீரர்களின் மோசமான ஆட்டத்தால் தான் தோல்வி அடைந்தோம் என்று அவர் சொல்லியிருந்தார். இதன் காரணமாக வருத்தமடைந்த அணியில் உள்ள சில வீரர்கள் பொல்லார்டு இது போன்று கருத்து தெரிவித்தது சரியல்ல என்று அவர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : தோனியின் சாதனையை முறியடிக்க தவறிய ரோஹித் சர்மா – இது தெரியுமா உங்களுக்கு?

அதைத் தொடர்ந்து தற்போது இந்திய தொடரிலும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு சற்று ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த இரண்டாவது போட்டியில் அவரை அணியில் இருந்து நிர்வாகம் வெளியேற்றியிருக்கலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement