Kieron Pollard : பொல்லார்ட்டை பேட்டி எடுத்த அவரது மகன். ரகசியத்தை பகிர்ந்த மகன் – விவரம் இதோ

நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் திரிலிங் வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கியகாரணமாக அமைந்தது பொல்லார்ட்டின் அதிரடி ஆட்டமே.

Pollard 1
- Advertisement -

நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் திரிலிங் வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கியகாரணமாக அமைந்தது பொல்லார்ட்டின் அதிரடி ஆட்டமே. போட்டி முடிந்து பொல்லார்ட் அவரின் மகனிடம் தனது ஆட்டம் குறித்து கேட்டார். அப்போது அவரின் மகன் நான்றாக ஆடினீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள். மேலும், அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். உடனே இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதினை பொல்லார்ட் அவரது மனைவிக்கு அர்ப்பணித்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

பொல்லார்ட் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜென்னா அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

Pollard

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய மும்பை அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை தவித்தது. பிறகு இறங்கிய மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

Pollard

ஒரு கட்டத்தில் மும்பை அணி எளிதாக தோற்றுவிடும் என்ற நிலையில் இருந்து பொல்லார்ட்டின் நம்பமுடியாத சிறப்பான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை திணறவைத்தார். சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு பறக்கவிட்டு மும்பை அணியை வெற்றபெற வைத்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார்.

Advertisement