இந்தமுறை விடமாட்டோம். இந்தியாவை தோற்கடித்த தீருவோம் – வெஸ்ட் இண்டீஸ் வீரர் சூளுரை

Wi-3

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி நாளை ஐதராபாத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

Ind-vs-Wi

இந்நிலையில் நாளைய போட்டி குறித்து பேட்டியளித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறியதாவது : வலுவான இந்திய அணியை எதிர்கொள்ளப் போகிறோம். அதனால் எங்களை குறைவாக மதிப்பிட்டு இருப்பார்கள் அதுவும் நல்லதுதான். களத்தில் எங்களது திட்டத்தை சரியாக நடைமுறைப் படுத்தி நாங்கள் செயல்பட இருக்கிறோம்.

எங்களது திறமை மீது எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு. இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவது என்பது சாதாரணமான விடயமல்ல இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய மண்ணில் வீழ்த்தியதால் எங்களுக்கு தற்போது நல்ல உத்வேகம் கிடைத்துள்ளது. இதன் மூலம் எங்களால் தற்போது இந்திய அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படமுடியும் என்று நம்புகிறோம்.

Pollard

மேலும் அனுபவ வீரராக இருந்து அணியை வழிநடத்த இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த முறை இந்திய சுற்றுப்பயணத்தில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம் எனவே இந்த தொடரை நாங்கள் விடமாட்டோம். இந்திய அணியை வீழ்த்தும் நோக்கத்துடன் நாளைய போட்டியில் விளையாட உள்ளோம் என்று பொல்லார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -