இந்தியாவை டி20-ல் மிரட்ட மீண்டும் மே.இ தீவுகள் அணிக்காக களமிறங்க உள்ள அதிபயங்கர வீரர்கள் – செம வெயிட்

WI
- Advertisement -

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த முதல் இரண்டு டி20 போட்டிகளில் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற உள்ளது.

narine

- Advertisement -

ஆகஸ்ட் 3 மற்றும் 4ம் தேதிகளில் இந்த இரண்டு போட்டிகளும் அடுத்தடுத்து நடைபெறுகிறது. மீதமுள்ள கடைசி போட்டி மற்றும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் என அனைத்தும் வெஸ்ட் இண்டீசில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

அதில் சில வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் இருந்த அதிரடி வீரரான பொல்லார்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் அணியில் தேர்வாகியுள்ளனர். தேர்வுக்குழு இடைக்கால தலைவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு பொல்லார்டையும், நரேனையும் அணியில் சேர்த்து உள்ளதாக கூறியுள்ளார்.

Pollard (1)

இதோ முதல் இரண்டு டி20 போட்டிக்கான அணி விவரம் : பிராத்வெயிட்(கேப்டன்), ஜான் கேம்பல், எவின் லெவிஸ், ஹெட்மயர், பூரான், பொல்லார்ட், பாவெல், கீமோ பால், சுனில் நரேன், காட்ரெல், தாமஸ், பிராம்பிள், ரசல், காரி பியர்ஸ்

Advertisement