ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது.
வங்கதேச ரசிகர்கருக்கு நடந்தது என்ன? :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது தற்போது கான்பூர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதலாவது நாள் ஆட்டத்தில் விளையாடிய வங்கதேச அணியானது மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 குவித்திருந்த வேளையில் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது நாள் ஆட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது வங்கதேச அணியின் பிரபல ரசிகரான டைகர் ராஃபி மீது இந்திய ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த போட்டியின் போது டைகர் ராபி பங்களாதேஷ் அணிக்காக ஆதரவளித்துக் கொண்டிருந்த போது அங்கு சில இந்திய ரசிகர்கள் அவரை தாக்கி புலி சின்னம் மற்றும் கொடியை கிழிக்க முயன்றதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இந்த தகவலை போலீசார் மறுத்துள்ளனர். இது குறித்து பேசிய ஏசிபி அபிஷேக் பாண்டே கூறுகையில் :
பங்களாதேஷ் ரசிகரை யாரும் தாக்கவில்லை. உடலில் ஏற்பட்ட நீரிழிப்பு காரணமாக அவர் மைதானத்தில் சரிந்து விழுந்தார். போலீசாரும் மருத்துவ ஊழியர்களும் உடனடியாக அவருக்கு உதவி செய்தனர். மேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து தற்போது அவர் நல்ல நிலையுடன் இருக்கிறார் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
இதையும் படிங்க : வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு அடித்துள்ள ஜாக்பாட் – விவரம் இதோ
மைதானத்தில் இருந்த வெப்பம் மற்றும் புழுக்கம் காரணமாகவே அவர் போதிய நீர்சக்தி இன்றி மயங்கி விழுந்ததாலே இந்த நிலையை அவர் சந்தித்துள்ளார். அது தவிர்த்து வேறு எந்த தாக்குதலும் அவர் மீது நடத்தப்படவில்லை என போலீசார் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



