இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த வேளையில் அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது தற்போது கான்பூர் நகரில் நடைபெற்று வருகிறது.
டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம் :
இந்த தொடரானது இன்னும் சில தினங்களில் முடிவடைந்து விடும் வேளையில் அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது அடுத்ததாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
ஏனெனில் இந்திய அணி அடுத்தடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முக்கிய போட்டியில் விளையாட இருப்பதால் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இதன் காரணமாக இந்திய அணியின் துவக்க வீரர்களாக மீண்டும் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் அண்மையில் தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளிலும் டக் அவுட்டாகி இருந்தாலும் அவரது மிகச் சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே இந்திய அணியில் நிரந்தர இடம் இன்றி தவித்து வரும் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒருமுறை இந்திய அணியின் நிர்வாகம் இந்த வாய்ப்பை வழங்கவுள்ளது. இந்த தொடரில் அவர் அசித்தினால் நிச்சயம் தொடர்ச்சியாக அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 602 ரன்ஸ்.. யார் சாமி இவரு.. வினோத் காம்ப்ளி, ஜெய்ஸ்வாலை முந்திய மெண்டிஸ்.. ப்ராட்மேனுக்கு நிகராக 3 சாதனை
இந்திய அணிக்காக கடந்த 2015-ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தற்போது வரை வெறும் 30 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதுதவிர்த்து 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



