தடுமாறும் சென்னை இனியும் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கா? – முழுவிவரம் இதோ

CSK-1
- Advertisement -

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தை பிடித்து அதலபாதாளத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடும் சென்னையை பார்க்கும் பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அந்த அணி மீது பரிதாபப்படுகிறார் என்று கூறலாம்.

CSK vs PBKS 3

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் அதிகப்படியான வெற்றிகளை குவித்த ஒரு அணியாக சென்னையை பார்த்துப் பழக்கப்பட்டவர்களின் மனம் தற்போது முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வி அடைவதை பார்க்க மறுக்கிறது. அதுவும் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக வெற்றிகளை மலைபோலக் குவித்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒவ்வொரு வருடமும் எப்படியாவது சென்னையை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுவிடுவார் என்ற எண்ணம் அனைத்து அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது.

2020 ரிட்டர்ன்ஸ்:
அந்த வகையில் 2008 – 2021 வரை தோனியின் தலைமையில் வெற்றிநடை போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அவர் தலைமையில் களமிறங்கிய 12 வருடங்களில் 11 சீசன்களில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அதில் 9 முறை இறுதிப்போட்டியில் விளையாடி 4 கோப்பைகளை முத்தமிட்டு ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணி அதிகமுறை பைனலில் விளையாட அணி போன்ற பெருமைகளையும் சென்னை பெற்றுள்ளது.

மறுபுறம் பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் ஒவ்வொரு வருடமும் மோசமாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு தடுமாறும் என்பதால் பெரும்பாலான வருடங்களில் அந்த அணி ரசிகர்கள் தங்களது கையில் கால்குலேட்டரை வைத்துக் கொண்டே சுற்றி வருவார்கள். ஆனால் அது போன்ற நிலைமை கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னை ரசிகர்களுக்கு முதல் முறையாக ஏற்பட்டது.

- Advertisement -

ஆம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்றில் கரும்புள்ளியாக கடந்த 2020 அமைந்தது. ஏனெனில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து விலகிய நிலையில் துபாய்க்கு மாற்றப்பட்ட அந்த ஐபிஎல் தொடரில் படுமோசமாக செயல்பட்ட சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் புள்ளி பட்டியலில் 7-வது இடம் பிடித்து பெரிய அவமானத்தை சந்தித்தது. அந்த நிலையில் இந்த வருடம் சென்னை மோசமாக செயல்படுவதை பார்த்தால் அந்த அணிக்கு 2020 ரிட்டர்ன்ஸ் வந்துவிட்டதாக பலருக்கும் தோன்றுகிறது.

CSK

இதில் கவலை என்னவெனில் அப்போது கேப்டனாக இருந்த ஜாம்பவான் எம்எஸ் தோனி இப்போது கேப்டனாக இல்லை என்பதுடன் அந்த வருடம் கூட இப்போது போல முதல் 4 போட்டிகளில் சென்னை அடுத்தடுத்து தோல்வி அடையவில்லை. எனவே 2020 போல மீண்டும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் மீண்டும் ஒரு அவமானத்தை தங்களது அணி சந்தித்து விடக்கூடாது என்ற கவலை அடைந்துள்ள சென்னை ரசிகர்கள் கடந்த வருடம் 4-வது முறையாக கோப்பையை வென்றதால் பரணியில் தூக்கி எறிந்த கால்குலேட்டரை இந்த வருடம் மீண்டும் தூசி தட்டி கையிலெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

சரி இந்த நிலைமையில் தொடர் தோல்விகளால் திண்டாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இனியும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதை பற்றி பார்ப்போம்:

CSK

1. தற்போதைய சூழ்நிலையில் சென்னை அணியின் நிலைமை அந்த அளவுக்கு மோசமாக சென்றுவிடவில்லை என்றாலும் அடுத்து வரும் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

- Advertisement -

2. அந்த அணிக்கு தற்போது 10 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் அந்த 10 போட்டியிலும் வென்றால் எந்தவித கவலையும் இல்லாமல் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு புள்ளி பட்டியலில் முதல் இடத்தைக் கூட பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு ராஜாவாக செல்லலாம்.

CSK Lost to LSG

2. ஆனால் 10 க்கு 10 என்ற வெற்றிகளுக்கு சாத்தியம் குறைவு என்பதால் 9 வெற்றி பெற்றால் கூட முதல் இடத்தை தவிர எஞ்சிய 3 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம். இருப்பினும் முதல் 2 இடங்களை பிடித்தால் ப்ளே ஆப் சுற்றில் எக்ஸ்ட்ராவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

3. அதேசமயம் 8 வெற்றிகளை பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகிவிடும். ஏனெனில் கடந்த வருடம் வரை 8 அணிகள் மட்டும் பங்கேற்றதால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு 50% சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 10 அணிகள் விளையாடுவதால் அது 50%க்கும் கீழாக குறைந்துள்ளது. அதாவது கடந்த வருடம் 14 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்றால் கூட போதும் என்ற நிலை இப்போது குறைந்தது 8 அல்லது 9 வெற்றிகள் தேவை என மாறியுள்ளது.

Ruturaj Robin Uthappa

4. அந்த வகையில் 8 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமெனில் அதற்கு நல்ல நெட் ரன்ரேட் தேவைப்படுகிறது. அப்போதும் கூட இதர அணிகளின் வெற்றி தோல்வியை சென்னை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலைமை வரலாம். அந்த வகையில் தற்போது மற்ற அணிகளை காட்டிலும் மோசமான ரன் ரேட் பெற்றுள்ள சென்னை அடுத்து வரும் போட்டிகளில் பெரிய வெற்றிகளை பதிவு செய்வதுடன் ரன்ரேட்டை உயர்த்தும் அதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க : இந்த ஒருவிடயம் நடந்தா போதும். மும்பை வீரர்களுக்கு மீண்டும் ஸ்பார்க் கெடச்சிடும் – ஜாஹீர் கான் நம்பிக்கை

5. ஒருவேளை 7 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு 90% குறைந்து போய் ஏதாவது மெடிக்கல் மிராக்கல் நிகழ்ந்தால் மட்டுமே உள்ளே போகமுடியும். 6 வெற்றிதான் என்றால் எந்தவித பேச்சும் இல்லாமல் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு அவர் அவர்கள் வீட்டுக்கு திரும்ப விடலாம்.

Advertisement