2023 உ.கோ ஜெயிக்கிறமோ இல்லையோ ஆனா இந்தியா நாக் அவுட் போறது 100% உறுதி – கவாஸ்கர் அடித்துக்கூறும் காரணம் என்ன

- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஐபிஎல் போன்ற எத்தனை டி20 தொடர்கள் வந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடருக்கு அன்றும் இன்றும் தனித்துவமான தரமும் ரசிகர்களிடம் குறையாத மவுசும் இருந்து வருகிறது. அந்த நிலைமையில் நவம்பர் 19 வரை முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 அணிகள் 48 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன.

- Advertisement -

அதில் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக போற்றப்படும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் விராட் கோலிக்கு பின் புதிய 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோகித் சர்மா தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்று அஸ்வினை தேர்வு செய்யாமல் தோற்று எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை நிரூபித்தது.

கவாஸ்கர் உறுதி:
அத்துடன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் முக்கிய போட்டிகளில் கை விடுவது சுமாராக விளையாடும் வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது போன்ற குளறுபடிகள் இந்திய அணியில் அரங்கேறி வருகின்றன. அது போக ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளதால் முதலில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு செல்லுமா? என பாருங்கள் என்று இந்திய ரசிகர்களே நம்பிக்கையற்று காணப்படுகின்றனர்.

IND vs AUS KL Rahul Jadeja

இந்நிலையில் இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்கிறதோ இல்லையோ குறைந்தபட்சம் அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதாவது இத்தொடரில் இந்தியா தன்னுடைய முதல் போட்டியிலேயே வலுவான ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. அந்த நிலையில் பொதுவாக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முதலில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டுமென கௌதம் கம்பீர் அடிக்கடி சொல்வார்.

- Advertisement -

அந்த வகையில் வலுவான ஆஸ்திரேலியாவை ஆரம்பத்திலேயே எதிர்கொள்வதால் ஒருவேளை தோல்வியுடன் இத்தொடரை துவங்கினாலும் அதிலிருந்து மீண்டெழுந்து அடுத்து வரும் போட்டிகளில் வென்று குறைந்தபட்சம் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாகும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இந்த தொடரில் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டால் அது மிகவும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தும்”

Gavaskar

“எனவே வலுவான அணியை ஆரம்பத்திலேயே எதிர்கொள்வது உங்களுக்கு மிகப்பெரிய சாதகம் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அதில் நீங்கள் வெற்றி பெற விட்டாலும் அடுத்து வரும் போட்டிகளில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக 2வது பகுதியில் பலவீனமான அணிகளை நீங்கள் எதிர்கொண்டால் அவர்களுக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் எவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பது போன்றவை உங்களுக்கு தெரியும். சொல்லப்போனால் 1983இல் நாங்கள் முதல் போட்டியில் வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடினோம்”

இதையும் படிங்க:எனக்கு கிடைக்க வேண்டிய விருதை அநியாயமா தோனிக்கு கொடுத்தாங்க – 10 வருடங்கள் கழித்து சயீத் அஜ்மல் விமர்சனம்

“அதில் நடப்பு சாம்பியனாக இருந்தாலும் நாங்கள் அவர்களை வீழ்த்தினோம். அந்த போட்டி மழையால் 2 நாட்கள் நடைபெற்றது. அந்த வெற்றியால் எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையும் கிடைத்தது. ஏனெனில் அதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைகளில் அப்படி ஒரு வெற்றியை நாங்கள் பெற்றதே கிடையாது. சொல்லப்போனால் அந்த வெற்றிக்கு முன்பு வரை நாங்கள் உலகக்கோப்பையில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை” என்று கூறினார்.

Advertisement