பவுண்டரிகளை வைத்து வெற்றியை அறிவித்ததற்கு பதிலாக ஐ.சி.சி இதனை செய்து இருக்கலாம் – விதியை விளாசும் வீரர்கள்

Eng-1
- Advertisement -

உலக கோப்பை இறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று மோதின.

eng vs nz

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட துவங்கிய இங்கிலாந்து அணி, ஐம்பது ஒவேரில் 241 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக மேட்ச் டை ஆனது. அதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.

stokes

இந்நிலையில் பவுண்டரிகளை வைத்து எடுக்கப்பட்ட இந்த வெற்றி முடிவு குறித்து பல முன்னணி வீரர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியதாவது : இந்த பவுண்டரி விதியை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. மீண்டும் ஒரு சூப்பர் அவர் நடத்தி அதில் எந்த அணி ஜெயித்தது என்று பார்த்து அதை வைத்து வெற்றி பெற்ற அணியாக அறிவித்திருக்கலாம். இல்லை என்றால் இரு அணிகளுக்கும் கோப்பையை பகிர்ந்து கொடுத்து இருக்கலாம் என்று கூறினார்.

England

மேலும் இந்தியனின் முன்னாள் வீரரான கம்பீர் : இப்படி ஒரு முடிவிற்கு எப்படி வந்தார்கள் என்று புரியவில்லை. ஐசிசியின் இந்த விதி கேலிக்குரியது கடைசிவரை விளையாடிய இரண்டு அணிகளுமே வெற்றி பெற்ற அணிதான் எனவே இருவருக்கும் கோப்பையை பகிர்ந்து கொடுத்து இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பிரெட் லீ கூறியதாவது : இந்த முடிவு பயங்கரமான முடிவாகும், இந்த விதி மாற்றப்பட வேண்டும் என்றும் நியூசிலாந்து வீரர் பிளமிங் இந்த முடிவு கொடூரமானது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement