டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு நாட்டுக்கு எதிராக அதிக சதங்களை அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Sunil Gavaskar
- Advertisement -

கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் கால சூழ்நிலைகள், எதிரணி பவுலர்கள் என அனைத்து சவால்களையும் சமாளித்து பெரிய அளவில் ரன்களை குவித்து வெற்றியில் பங்காற்றும் முனைப்புடன் களமிறங்குவார்கள். அப்படி ஒவ்வொரு போட்டியிலும் 0 ரன்களில் இருந்து தொடங்குதால் களமிறங்கும் அத்தனை போட்டிகளிலும் குறைந்தது அரை சதமடிக்க வேண்டும் அதிகபட்சமாக சதமடிக்க வேண்டும் என்பதே ஒரு பேட்ஸ்மேனின் விருப்பமாக இருக்கும். அதற்கு தடையாக பெரும்பாலான போட்டிகளில் எதிரணி பவுலர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி சவாலை கொடுப்பார்கள் என்பதால் அனைத்து போட்டிகளிலும் சதமடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஒன்றாகும்.

அது ஒரு புறமிருக்க மனிதராக பிறக்கும் அத்தனை பேருக்கும் உணவு உட்பட ஏதோ ஒன்று மிகவும் பிடித்ததாக இருக்கும். அந்தத் தன்மையை விளையாட்டில் குறிப்பாக கிரிக்கெட்டில் அதிகமாகவே அடிக்கடி பார்க்கலாம். ஆம் கிரிக்கெட்டில் ஒரு நாட்டுக்காக விளையாடும் பேட்ஸ்மேன் குறிப்பிட்ட சில அணிகளுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக செயல்படக் கூடியவராக இருப்பார். அதற்கு காரணம் அவர் விளையாடும் அந்த காலகட்டத்தில் எதிரணியில் இருக்கும் பவுலர்களின் பலவீனங்களை தெரிந்து வைத்து அதற்கு ஏற்றார்போல் யுத்திகளை கையாண்டு பெரிய அளவில் ரன்களை குவித்திருப்பார்.

- Advertisement -

பேவரைட் டீம்ஸ்:
உலகின் இதர அணிகளுக்கு எதிராக தடுமாறினாலும் உலகையே மிரட்டும் ஆஸ்திரேலியாவை பார்த்தால் அல்வாவை போல் அபாரமாக பேட்டிங் செய்து பெரிய ரன்களையும் சதங்களையும் விளாசிய இந்திய ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் இதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு அந்தஸ்தைப் பெற்ற டாப் 8 நாடுகளுக்கு எதிராக அதிகபட்ச சதங்களை அடித்த பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

8. ஜாவேத் மியாண்டட் – நியூஸிலாந்து 7: 80 மற்றும் 90களில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பாகிஸ்தானுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஜாம்பவான் ஜாவேத் மியாண்டட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக எப்போதுமே மிகச்சிறப்பாக செயல்படக்கூடியவராக திகழ்ந்த அவர் அந்த அணிக்கு எதிராக உலகிலேயே அதிக பட்சமாக 1919 ரன்களையும் 7 சதங்களையும் அடித்து அசத்தியுள்ளார்.

7. ரிக்கி பாண்டிங்/ராபர்ட் நெய்ல் ஹர்வி – தென்ஆப்பிரிக்கா 8: ஆஸ்திரேலியாவை சேர்ந்த மகத்தான கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் உலகின் அனைத்து அணிகளுக்கும் எதிராக அபாரமாக பேட்டிங் செய்து ஏராளமான ரன்களையும் சாதனைகளை படைத்தவர்.

- Advertisement -

இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மற்ற அணிகளை காட்டிலும் வரலாற்றில் மிகச்சிறப்பாக செயல்பட்ட இவர் அதிகபட்சமாக 8 சதங்களை அடித்துள்ளார். அவரை போலவே 60களில் விளையாடிய மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ராபர்ட் நெய்ல் ஹார்வியும் அந்த காலத்து தென் ஆப்பிரிக்காவை அபாரமாக எதிர்கொண்டு 8 சதங்களை விளாசியுள்ளார்.

6. ஜோ ரூட் – இந்தியா 9: கபில் தேவ், அனில் கும்ப்ளே உட்பட தரமான பவுலர்களை வரலாற்றில் கொண்ட இந்தியாவுக்கு எதிராக ரிக்கி பாண்டிங், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற குறிப்பிட்டளவு பேட்ஸ்மேன்கள் மட்டுமே வெற்றிகரமாக இருந்துள்ளார்கள்.

- Advertisement -

ஆனால் அவர்களைக் காட்டிலும் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் ஜோ ரூட் இந்தியாவை பார்த்தாலே துரத்தி துரத்தி அடிப்பது போல் உலகிலேயே அதிகபட்சமாக 9 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

5. சச்சின் டெண்டுல்கர் – இலங்கைகு 9: முரளிதரன், வாஸ் போன்ற தரமான பவுலர்களை தாம் விளையாடிய காலத்தில் திறம்பட எதிர்கொண்ட இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலகிலேயே இலங்கைக்கு எதிராக அதிகபட்சமாக 9 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 சதங்களை அடித்திருந்தாலும் ஆல்-டைம் பட்டியலில் 2-வது இடத்திலேயே உள்ளார். இலங்கைக்கு எதிராக தான் அதிகபட்ச சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக முதலிடத்தில் உள்ளார்.

4. குமார் சங்கக்காரா – பாகிஸ்தான் 10: ஜாம்பவான் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இலங்கையின் குமார் சங்ககாரா ஆசியாவின் மற்றொரு டாப் நாடான பாகிஸ்தானுக்கு எதிராக உலகின் இதர அணிகளை காட்டிலும் கூடுதல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அந்த வகையில் உலகிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக 10 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாகவும் அவர் பெருமை பெற்றுள்ளார்.

3. ஜாக் ஹோப்ஸ் – ஆஸ்திரேலியா 12: 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலமான 1908 – 1930 ஆகிய காலகட்டத்தில் இங்கிலாந்துக்கு விளையாடிய இவர் பரம எதிரியாக உருவாகத் துவங்கிய ஆஸ்திரேலியாவை பார்க்கும் போதெல்லாம் மிகச்சிறப்பாக எதிர்கொண்டு இப்போதும் தனது பெயர் நிலைத்து பேசும் அளவுக்கு உலகிலேயே அதிகபட்சமாக 12 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 11 சதங்கள் அடித்துள்ளார்.

2. சுனில் கவாஸ்கர் – வெஸ்ட்இண்டீஸ் 13: இந்த பட்டியலில் இந்த இடத்தை பிடித்துள்ள இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மிகவும் பாராட்டுக்குரியவர். ஏனெனில் 70 மற்றும் 80களில் மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னெர் போன்ற பேட்ஸ்மேன்கள் மண்டையையும் உடம்பையும் காலி செய்யக் கூடிய வெறித்தனமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் உலக கிரிக்கெட்டையே மிரட்டியது.

அந்த அளவுக்கு மிரட்டலான வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட்டை துவங்கிய சுனில் கவாஸ்கர் அப்பேர்பட்ட உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அட்டகாசமாக ஹெல்மெட் போடாமலேயே எதிர்கொண்டு உலகிலேயே அதிகபட்சமாக 13 சதங்களை அடித்துள்ளார் என்றால் உண்மையாகவே அவருக்கு நிகர் யாரும் கிடையாது என்றே கூறலாம்.

1. டான் பிரென்மேன் – இங்கிலாந்து 19: 1930களில் உலகின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் டான் பிராட்மேன் அந்த சமயத்தில் இருந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 அணிகளில் இங்கிலாந்தை ஏறக்குறைய எதிர்கொண்ட அத்தனை போட்டிகளிலும் சரமாரியாக அடித்தவர்.

சொல்லப்போனால் அவர் எடுத்த 6996 ரன்கள் மற்றும் 29 சதங்களில் 5028 ரன்கள் மற்றும் 19 சதங்கள் இங்கிலாந்துக்கு எதிராக அடித்து உலகிலேயே குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக இன்றும் நின்று பேசுகிறார்.

Advertisement