ஆஷஸ் தொடரில் வரலாற்றில் முதல் முறையாக நடக்கும் அதிசய நிகழ்வு – அடுத்தடுத்து அசத்தும் ஐ.சி.சி

Root
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அனிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க தொடரான ஆஷஸ் தொடர் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி துவங்க உள்ளது. கிரிக்கெட் உலகமே உற்று நோக்கும் தொடர்களில் ஆஷஸ் தொடரும் ஒன்று.

ashes

- Advertisement -

ஏனெனில் இந்தியா பாகிஸ்தான் போட்டி போன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் மோதும். இந்த தொடரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இம்முறை ஆஷஸ் தொடரில் விளையாடும் வீரர்கள் வெறும் வெள்ளை நிற உடை அணியாமல் அந்த வெள்ளை நிற உடையில் தங்களது பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சியுடன் விளையாட உள்ளனர்.

இது தொடர்பாக இங்கிலாந்து அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது : டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெர்சியில் வீரர்களின் எண்களும், பெயரும் இடம்பெற உள்ளது என பதிவிடப்பட்டது. இந்த பதிவுடன் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் புதிய ஜெர்சி அணிந்து உள்ள படம் சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்கள் தங்களின் ஜெர்சியில் பெயர் மற்றும் எண்களுடன் விளையாடி வருகின்றனர். ஆனால் டெஸ்ட் போட்டியில் பெயர் மற்றும் எண் இல்லாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் பெயர் மற்றும் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சிகளை அணிவது ஐ.சி.சி-யால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement