2019 ஆம் ஆண்டு ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து விளையாடும் வயதான 5 வீரர்கள்

Dhoni-1
- Advertisement -

நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. அதில் பவுண்டரி விதி மூலம் இங்கிலாந்து அணி கோப்பையை முதன்முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

England

- Advertisement -

இந்த உலக கோப்பை தொடர் முடிந்ததும் பல சீனியர் வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல வீரர்கள் வயதாகியும் இன்னும் ஓய்வு அறிவிக்காமல் தொடர்ந்து விளையாடுவதாக உள்ளனர் அவர்களை பற்றிய தொகுப்பு தான் இது. இதோ உங்களுக்காக 5 வயதான ஓய்வை அறிவிக்காத வீரர்களின் விவரம் :

மகேந்திர சிங் தோனி : இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரரான தோனி கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் அடியெடுத்து வைத்தார். அதன் பின் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னணி வீரராக வலம் வரும் தோனி தற்போது ஃபார்ம் அவுட் மற்றும் வயதான வீரர் என்பதால் அணியில் இருந்து சற்று ஓரங்கட்டப்பட்ட வருகிறார். இருந்தாலும் அவர் இன்னும் ஆய்வு முடிவினை அறிவிக்கவில்லை தொடர்ந்து விளையாடுவதாக முடிவெடுத்துள்ளார்.

dhoni

கிறிஸ் கெயில் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான கிறிஸ் கெயில் கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக கிரிக்கெட் விளையாடத் தொடங்கி சுமார் 20 ஆண்டுகளாக தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது 39 வயதாகும் இன்னும் ஓய்வு அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

gayle

மோர்தாசா : பங்களாதேஷ் அணியின் கேப்டனாக 2019 உலக கோப்பையில் செயல்பட்டவர். மேலும் வங்கதேச அணியின் மூத்த வீரர் ஆவார். 2001ஆம் ஆண்டு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஹசிம் ஆம்லா : தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான அம்லாவிற்கு தற்போது 36 வயதாகிறது. அவரும் இந்த உலகக் கோப்பைத் தொடரோடு ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் அவரும் தொடர்ந்து விளையாடுவேன் என்று ஓய்வு முடிவை அறிவிக்காமல் உள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amla-1

முகமது ஹபீஸ் : 38 வயதான பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஆன இவர் பாகிஸ்தான் அணிக்காக நான்காவது இடத்தில் இறங்கி ஆடி வருகிறார். இவரம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி வருகிறார். 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமான இவர் இன்னும் ஓய்வினை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hafeez

Advertisement