இந்த ஐ,பி.எல் தொடரில் வீரர்கள் விளையாட வேண்டுமென்றால் இந்த ரூல்ஸ்லாம் பாலோ பண்ணணுமாம் – விவரம் இதோ

- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரும் பாதிப்புக்கு பிறகு தற்போது மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த வருடம் மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு இறுதியாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரை நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகின.

ipl

மேலும் ஆகஸ்ட் 2ம் தேதி இந்த தொடருக்கான அட்டவணையும் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தொடருக்கான வீரர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறை குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஐபிஎல் தொடரில் இந்தாண்டு ரசிகர்கள் இல்லாமல் நடைபெறப் போவதாகவும், வர்ணனையாளர்கள் 6 அடி இடைவெளி விட்டு அமரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .

- Advertisement -

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஓய்வு அறையிலும் 15 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் இதுபோன்ற பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. மேலும் இந்த தொடரில் விளையாட இருக்கும் அனைத்து வீரர்களும் வாரத்திற்கு இருமுறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அந்த முடிவுகளின் படி அவர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ipl-bowlers

அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் கடைப்பிடிக்கப்பட உள்ள விதிகளை எக்காரணம் கொண்டும் வீரர்கள் மீறக் கூடாது அப்படி மீறும் வீரர்கள் மீது சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றும் உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இந்த தொடர் வந்த பின்பு வீரர்கள் வெளியே செல்லக் கூடாது அப்படி வெளியே செல்லும் வீரர்கள் மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று உறுதியாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி வீரர்களுடன் உறவினர்கள், அவரது குடும்பத்தினர் ஆகியோர் அனுமதிக்கப் படுவார்களா என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அணி உரிமையாளர்கள், ஊழியர்கள், ஓட்டுநர்கள் என அனைவருக்குமே தனித்தனியாக கொரோனா விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவை வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ipl

எக்காரணம் கொண்டும் இந்த விதிமுறைகள் எல்லாம் வீரர்கள் மீறக்கூடாது என்றும் கட்டாயமாக இவைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உறுதியாக கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement