ஐபிஎல் தொடரிலிருந்து இந்த 7 வீரர்கள் நீக்கலாமா ?…சென்னை வீரர் உள்பட..! – காரணம் இதுதான் ?

yuvi
- Advertisement -

நடந்து வரும் ஐபில் போட்டிகளில் பல்வேறு அணிகளில் உள்ள வீரர்கள் சுதாப்பி வருகின்றனர். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாள் மட்டுமே அவர்கள் அனைவரும் அணியில் நிலைத்து நிற்க வாய்ப்பு உள்ளது. அது மட்டும் இல்லாமல் ஒரு சில சர்வேதேச வீரர்களால் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. மேலும் ஒரு சில வீரர்கள் தங்களது மோசமான ஆட்டம் காரணமாக அணியில் இருந்து விளக்கப்படுவார்களா என்று எதிர்பார்க்கபடுகிறது.

rohit

- Advertisement -

அந்த நிலையில் பஞ்சாப் அணியில் உள்ள அதிரடி ஆட்டக்காரர்களான யுவராஜ் சிங்கும் மற்றும் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேனான ஏரோன் பிஞ்சும் இதுவரை ஆடிய ஆட்டங்களில் சிறப்பாக ஜொலிக்கவில்லை. அதிலும் ஏரோன் பிஞ்ச் இதுவரை ஆடிய போட்டிகளில் எந்த போட்டியிலும் 20 ரன்களை தாண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை அடுத்து சென்னை அணியில் விளையாடி வரும் இந்திய அணியின் ஆல் ரவுண்டு பிளேயராணா ஜடேஜாவும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. ஜடேஜா இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 47 ரன்களைத்தான் குவித்துள்ளார். சரி பேட்டிங்கில் தான் ஒன்றும் இல்லை என்றாலும் இதுவரை இவர் விளையாடிய போட்டிகளில் ஒரே ஒரு விக்கெட்டை தான் கை பற்றியுள்ளார் ஜடேஜா.

jadeja

சரி அனுபவமிக்க வீரர்கள் தான் இப்படி பார்மில் இல்லாமல் இருக்கிறார்கள் என்று பார்த்தால். இந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் இரண்டாவது அதிக ஏலம் கொடுத்து எடுக்கப்பட்ட இளம்வீரரான உனத் கத்தும் பந்து வீச்சில் மங்கித்தான் உள்ளார். இவர் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். மேலும் இவரது பௌலிங் சராசரியும் ஓவருக்கு 10.05 என மிக மோசமாக உள்ளது.

மேலும் மும்பை அணியில் ஆடி வரும் ரோஹித் சர்மா மற்றும் பொல்லார்ட் போன்ற வீரர்களும் இதே நிலை தான். ஆனால் ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டன் என்பதால் அவரை அணியில் இருந்து நீக்கும் வாய்ப்பு மிக குறைவு தான். எனவே இனி வரும் போட்டிகளில் எந்தத்த வீரர்கள் போட்டிகளில் இருந்து சிறிது நாட்கள் நீக்க படுவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Advertisement