அயல்நாட்டுக்காக விளையாடும் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் – யாரெல்லாம் தெரியுமா.

amala

அயல் நாட்டிற்காக விளையாடி அசத்திவரும் இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் தான் இவர்களும்.அவர்களில் முக்கியமான நான்கு வீரர்களை பற்றிதான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகின்றோம்.

1. சந்தர்பால்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிவரும் இவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடி ஓய்வுபெற்ற இவர் 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் 11867 ரன்களை குவித்தவர்.

2. ஆம்லா.

amla1

- Advertisement -

உலகின் தலைசிறந்த பேஸ்மேன்களில் ஒருவரான இவர் தென்ஆப்பிரிக்காவிற்காக விளையாடி வருகின்றார்.இந்தியாவை பூர்வீகமாக பிறந்த இவர் பிறந்தது குஜராத்தில். தென்ஆப்பிரிக்க அணியின் தவிர்க்க முடியாத வீரரான இவர் பலதொடர்களில் ரன்களை குவித்து அசத்தியவரும் கூட.

3. சுனில் நரேன்.

narine

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடி வரும் இவர் மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவர்.மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடி இக்கட்டான சூழல்களில் எதிரணியினரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைகளில் அழைத்துச்சென்ற பந்துவீச்சாளரும் கூட.

4. நாசர் ஹுசைன்.

Nasser

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இவரும் இந்தியாவை சேர்ந்தவர் தான்.இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியவர்.இங்கிலாந்து அணியின் பேஸ்மனான இவரும் அந்த அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்களில் ஒருவர்.