சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் பிரபல ஆல்ரவுண்டர் வீரர் !

Morne-morkel-player
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியை சேர்ந்த மோர்னே மார்கல் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். 2006ம் ஆண்டுமுதல் தென்ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் இவர் இதுவரையில் 117 ஒருநாள் போட்டிகளில் பந்துவீசி 188 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 44 போட்டிகளில் பந்துவீசி 47 விக்கெட்டுகளையும், 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

morne morkel

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வந்தது.இந்த சுற்றுப்பயணம் தொடங்கும் முன்னரே தென்ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் மோர்னே மார்கல் இதுதான் என்னுடைய கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர். இந்த தொடருடன் நான் ஓய்வு பெற போகிறேன் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நான்கு டெஸ்ட் போட்டிகளும் முடிவடைந்த நிலையில் ஜோகன்ஸ்பர்க்கில் தென்ஆப்பிரிக்க நிர்வாகம் சார்பாக நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.மோர்னே மார்கல் ஓய்வுபெற்றதை தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற மார்கல் இனிமேல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement