சி.எஸ்.கே அணியில் இம்முறை இவர் சிறப்பாக விளையாடிய ஆக வேண்டும். இல்லனா அவ்ளோதான் – விவரம் இதோ

csk

பல்வேறு இன்னல்களை கடந்து பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள. இன்று மூன்று மைதானங்களில் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் அனைத்து அணைகளிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட வாய்ப்பு உள்ளது.

Dubai

இந்நிலையில் தற்போது சென்னை அணியில் புதிதாக வந்திருக்கும் ஒரு வீரருக்கு மிகப்பெரிய அழுத்தம் இந்த தொடரில் காத்திருக்கிறது. அவர் யாரெஎனில் புதிதாக சென்னை அணிக்கு இணைந்துள்ள சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா தான். கடந்த பல சீசன்களாக கொல்கத்தா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த இவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் சிஎஸ்கே அணி அவரை நம்பி மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 6.75 கோடிக்கு அவரை ஏலம் எடுத்துள்ளது. இதனால் இம்முறை அவருக்கு மிகப்பெரிய அழுத்தம் உண்டாகி உள்ளது என்றால் அது மிகையல்ல. ஏனெனில் மிகப் பெரிய அளவில் சாதிக்காத இவரை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து சிஎஸ்கே அணி கையில் எடுத்துள்ளதால் இவரிடமிருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கும்.

Chawla

அதுமட்டுமின்றி இவர் அணியில் இடம் பிடிப்பதே இப்போது கஷ்டம் என்று தோன்றுகிறது. ஏனெனில் சி.எஸ்.கே அணியில் ஏற்கனவே ஜடேஜா, ஹர்பஜன், கரண் ஷர்மா, இம்ரான் தாஹிர் போன்ற 4 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அவர்களையும் மீறி அணியில் இவருக்கு இடம் கிடைக்குமாயின் அப்போது இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கூற்று உள்ளது.

- Advertisement -

இல்லையெனில் இவருக்கு இது இந்த ஆண்டு கடைசி தொடராக அமையும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இவரை ஏலம் எடுத்த போதே இந்த தேர்வு தேவையில்லாத தேர்வு என்று ரசிகர்கள் பலரும், கிரிக்கெட் நிபுணர்கள் இடையேயும் ஒரு பேச்சு இருந்து வந்தது. ஆனால் சாவ்லாவோ தோனி என்னை நம்பி சென்னை அணிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

Chawla

அதுமட்டுமின்றி ஏற்கனவே தோனி விரும்புவதாலேயே நான் சென்னை அணிக்கு தேர்வானதாகவும் கூறியுள்ளார். இதனால் இம்முறை அவரிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டே ஆக வேண்டும் அப்படி இல்லையெனில் அவரது கிரிக்கெட் கரியரின் முடிவாக இந்த தொடர் அமையும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.