- Advertisement -
ஐ.பி.எல்

சஞ்சு சாம்சன் வந்ததால் சி.எஸ்.கே அணியின் இந்த பிரச்சனை தீரும் – பியூஷ் சாவ்லா கருத்து

கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ராஜஸ்தான் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்த சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு செய்தார். அதன்பிறகு பல்வேறு அணிகள் அவரை மினி ஏலத்திற்கு முன்னதாகவே டிரேடிங் செய்ய முயற்சித்தனர். அது தொடர்பான செய்திகளும் அப்போது வெளியாகி வைரலாகியிருந்தன.

சஞ்சு சாம்சனின் வருகை சி.எஸ்.கே அணிக்கு நல்லது : பியூஷ் சாவ்லா

அந்த வகையில் 2026 மினி ஏலத்திற்கு முன்னதாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தங்களது அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை வெளியேற்றி சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சி.எஸ்.கே அணிக்குள் கொண்டு வந்தது. ஏற்கனவே தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என்று பலரும் பேசிவந்த வேளையில் சஞ்சு சாம்சனின் வருகை தோனியின் ஓய்வை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.

- Advertisement -

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் சரியான மாற்றுவீரர் என்றும் தற்போது பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சனின் வருகையால் சி.எஸ்.கே அணி பலமடையும் என்று பியூஷ் சாவ்லா கூறியுள்ளார்.

மேலும் பவர்பிளே ஓவர்களில் விரைவாக ரன்களை எடுக்கும் என்றும் அதனால் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்களுக்கான பிரச்சினை தீரும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான பியூஷ் சாவ்லா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சன் தனியாகவே போட்டியை வெல்லக்கூடிய ஒரு வீரர். டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அவர் மூன்று சிறப்பான இன்னிங்க்ஸை விளையாடி தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றின் மிகச்சிறந்த 2 அணிகள் இதுதான். அணில் கும்ப்ளே தேர்வு – விவரம் இதோ

தற்போது நல்ல பார்மில் இருக்கும் அவர் சென்னை மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப சிறப்பாக விளையாடக்கூடிய வீரராக இருக்கிறார். அவரது அதிரடியான துவக்கம் சென்னை அணிக்கும் பலத்தை சேர்க்கும் என பியூஷ் சாவ்லா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -