
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்தது. அதன்பிறகு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த தொடரையும் இந்திய அணி கைப்பற்ற முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.
2026 டி20 உலக கோப்பை தொடரை வென்ற பிறகு இப்படி அடுத்தடுத்து தோல்விகள் இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் மூன்று வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன் 5,0,1 என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி மாற்று வீரராக இடம் பிடித்துள்ளார்.
இதனால் எஞ்சியுள்ள இங்கிலாந்து தொடரில் சஞ்சு சாம்சன் மீண்டும் விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோன்று இந்த இங்கிலாந்து தொடருக்கு அடுத்து வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரது கிரிக்கெட் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து இந்திய அணியில் விளையாட வேண்டுமெனில் எந்த பேட்டிங் ஆர்டரில் விளையாட வேண்டும்? என்பது குறித்து முன்னாள் இந்திய துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சனை நீங்கள் மீண்டும் விளையாட வைக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் எந்த இடத்தில் களமிறங்கி சாதித்தாரோ அந்த இடத்தில் தான் விளையாட வைக்க வேண்டும்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் இந்த விடயத்தில் விராட் கோலியை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும் – சஞ்சய் மஞ்சரேக்கர்
நான்காவது, ஐந்தாவது, ஆறாவது வரிசையில் அவரை களமிறக்க முயற்சித்தால் அது தவறு. ஏனெனில் அவர் அந்த இடங்களில் சிறப்பாக விளையாடியது கிடையாது. எனவே டாப் 3 இடங்களில் மட்டுமே அவருக்கு பேட்டிங் செய்ய சரியான இடம் அந்த இடத்தை வழங்கினால் தான் அவர் சிறப்பாக விளையாடுவார் என அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.