தோனி ராஞ்சியில் ஏதோ பண்ணியிருக்காரு. இல்லனா எப்படி இவ்ளோ சூப்பரா… – பியூஷ் சாவ்லா பிரமிப்பு

- Advertisement -

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் தோனி இதுவரை பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர் விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனியோ ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை மேலும் அவரது ரசிகர்கள் தோனி ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் கண்டுகளிக்க காத்து இருந்தனர்.

Dhoni

- Advertisement -

ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு காரணமாக அம்மாத இறுதியில் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பூரண ஓய்வு நேரத்தில் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தோனி குறித்தும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிஎஸ்கே அணியில் புதிய வரவாக வந்துள்ள பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா சென்னையில் தோனியுடன் பங்கேற்ற வலை பயிற்சி குறித்த அனுபவங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

Chawla

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சாவ்லா கூறுகையில் : உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து மீண்டும் களத்துக்கு வரும் போது சிறிது தடுமாற்றம் ஏற்படும். ஆனால் தோனியிடம் அந்த தடுமாற்றத்தை நான் பார்க்கவில்லை.

- Advertisement -

அவர் நிச்சயம் ராஞ்சியில் ஏதோ செய்திருக்கவேண்டும். பயிற்சியைத் தொடங்கிய உடன் சில பந்துகளை சாதாரணமாக எதிர்கொண்டு ஆடியவர். அதன் பின்னர் பந்துகளை பலமாக அடித்து ஆட ஆரம்பித்தார். அதனை கண்ட எனக்கு சற்று வியப்பாகவே இருந்தது. மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

Dhoni

தோனி தினமும் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி ஆகியோர் ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரம் பயிற்சி செய்தனர். அந்த இரண்டரை மணி நேரப் பயிற்சியில் இடைவெளி இல்லாமல் ஒரு சிறிய இளைஞரைப் போல் தோனி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் சாவ்லா ஆச்சரியமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement