6.75 கோடி கொடுத்து எடுத்ததுக்கு சரியான வேலை பார்த்த சி.எஸ்.கே நட்சத்திரம் – கில்லாடி தான்

- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

Curran

கடந்த தொடரைப் போலவே இந்த தொடரிலும் 30 வயதிற்கு மேற்பட்ட வீரர்களை அதிகமாக கொண்டுள்ளதால் வயதான வீரர்கள் கொண்ட அணி என்று சென்னை சிஎஸ்கே அணி விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தொடரில் ஏலத்தில் ஏற்கனவே அதிக மூத்த வீரர்கள் இருக்கும் நிலையிலும் சுழற்பந்து வீச்சாளராக புதிதாக 31 வயதான பியூஷ் சாவ்லாவை ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

ஏற்கனவே ஜடேஜா, இம்ரான் தாகீர், கரண் ஷர்மா ஆகியோர் இருப்பதால் தேவையின்றி ஏன் வாங்கப்பட்டுள்ளார் என்று சாவ்லாவின் மீது விமர்சனம் எழுந்தது. மேலும் அதுவும் குறைந்த தொகை எல்லாம் அல்லாமல் 6.75 கோடிக்கு வாங்கப்பட்டார். சிறப்பான பல இளம் வீரர்களை சில கோடிகளுக்கு மற்ற அணிகள் ஏலத்தில் வாங்கிக்கொண்டிருக்க வயதான வீரர் மட்டுமன்றி சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் இவரை ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

chawla 1

ஆனாலும் டோனி அவரை வாங்குவதில் உறுதியாக இருந்தார். அதனால் சிஎஸ்கே அணிக்காக சாவ்லா தேர்வானார். இந்நிலையில் நேற்று துவங்கிய மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவரின் சேர்க்கையை நியாயப்படுத்தினார். ஆம் நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் முழுமையாக வீசிய அவர் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக மும்பை அணியின் அதிரடி வீரரும் கேப்டனுமான ரோஹித்தை 12 ரன்களில் வீழ்த்தி தான் வீசிய முதல் ஓவரிலேயே சென்னை அணிக்கு திருப்பத்தை கொடுத்தார்.

Chawla 2

துவக்க வீரர்களான டி காக் மற்றும் ரோஹித் ஆகியோர் சென்னை அணியின் பந்துவீச்சை முதல் 4 ஓவர்களில் நாலாபுறமும் சிதறடித்தனர். அதனால் 4 ஓவரிலேயே 40 ரன்களை கடந்தது. அப்போதுதான் ஐந்தாவது ஓவரை தோனி சாவ்லாவின் கையில் கொடுத்தார். நினைத்தது போலவே முதல் ஓவரிலேயே அபாயகரமான ரோகித் சர்மாவை 12 ரன்களில் வெளியேற்றி தோனியின் நம்பிக்கையை காப்பாற்றினார்.

Advertisement