- Advertisement -
உலக கிரிக்கெட்

ஆல்டைம் பெஸ்ட் லெவனை தேர்வு செய்த பியூஷ் சாவ்லா. முக்கிய தலைகளுக்கு இடமில்லை – வீரர்களின் விவரம் இதோ

பியுஷ் சாவ்லா இந்திய அணிக்காக கடந்த 2006ம் ஆண்டு அறிமுகமானார். இரண்டு உலகக் கோப்பைகள் தோனி தலைமையில் வென்ற போது இரண்டு அணிகளிலும் இருந்தவர்களில் இவரும் ஒருவர். தற்போது இவருக்கு 31 வயதாகிறது. இந்திய அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒரு நாள் போட்டிகளிலும் 7 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

இந்நிலையில் இவர் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்டைம் லெவனை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள அணியில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. மேலும் , தோனியை இவர் கீப்பராக முன்வைக்கவில்லை. கோலியையும் இவர் அணியில் தேர்வு செய்யவில்லை.

இவரது அணியில் துவக்க வீரராக இந்தியாவின் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிரடி வீரர் மேத்யு ஹைடன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இருவரும் வலது இடது என ஆடுவார்கள். இதனால் அணியின் துவக்கம் சரியாக இருக்கும் .மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கையை தேர்வு செய்துள்ளார். இவர்தான் இந்த அணிக்கு கேப்டனாக இருக்கிறார்.

நான்காவது இடத்தில் இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார். ஐந்தாவது இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடதுகை ஆட்டக்காரர் லாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக தோனியை விட்டுவிட்டு ஆடம் கில்கிறிஸ்ட்டை தேர்வு செய்துள்ளாராம். இது என்ன மாதிரியான தேர்வு என்று தெரியவில்லை.

ஆல்-ரவுண்டராக இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில்தேவை தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மற்றும் இலங்கையின் முத்தையா முரளிதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதிலும் இந்தியாவின் அணில் கும்ளேவை மறந்து விட்டார் போலிருக்கிறது.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கர்ட்லி ஆம்புரோஸ் தேர்வாகியுள்ளார். 12 ஆவது வீரராக போனால் போகட்டும் என ஜாக் காலிசை தேர்வு செய்துள்ளார் பியூஸ் சாவ்லா.

பியூஸ் சாவ்லா தேர்வு செய்துள்ள ஆல் டைம் சிறந்த லெவன் :

விரேந்திர சேவாக், மேத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஆடம் கில்கிறிஸ்ட் (விக்கெட் கீப்பர் ), கபில் தேவ், வாசிம் அக்ரம், சேன் வார்னே, முத்தையா முரளிதரன், கர்ட்லி ஆம்ப்ரோஸ். 12வது வீரர் – ஜக் காலிஸ்

- Advertisement -
Published by