எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களாக கருதப்படுகிறார்கள். அதில் தோனிக்கு முன்பே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்தார். அதனால் இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்ற அவர் 2024 டி20 உலகக் கோப்பையை வென்றார்.
அதன் காரணமாக எம்எஸ் தோனிக்கு பின் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். மறுபுறம் ரோஹித்துக்கு நிகராக 5 கோப்பைகளை வென்றுள்ள எம்எஸ் தோனியும் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். ஆனால் அதற்கு முன்பு 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டனாக தோனி சாதனை படைத்துள்ளார்.
எம்எஸ் தோனி – ரோஹித் சர்மா:
மேலும் 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித்தை விட தோனி சிறந்த கேப்டனாக அறியப்படுகிறார். இந்நிலையில் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே சமமான திறமை கொண்ட கேப்டன் என்று முன்னாள் பியூஸ் சாவ்லா கூறியுள்ளார்.
அந்த இருவரது தலைமையிலும் விளையாடியுள்ள பியூஸ் சாவ்லா இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த இருவரையுமே பார்க்கும் போது அவர்கள் மிகவும் அமைதியான கேரக்டர்கள். எளிதில் பதற்றமடைய மாட்டார்கள். போட்டியின் சூழ்நிலைகளை நன்றாக படிக்கக்கூடிய அவர்கள் போட்டியை நகர்த்துவது கவரக்கூடியதாக இருக்கும். ஒரு போட்டியை நடத்துவதே கேப்டனின் வேலையாகும்”
சிறந்த கேப்டன்:
“சில நேரங்களில் போட்டியின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அதை நீங்கள் குறைக்க வேண்டும். சில நேரங்களில் அனைத்தும் நன்றாகச் செல்லும் போது நீங்கள் போட்டியை வேகமாக முடிக்க முயற்சிக்க வேண்டும். அந்த வகையில் தோனி மற்றும் ரோஹித் செயல்படுவதாலேயே சென்னை – மும்பை வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன என்று நினைக்கின்றேன்”
இதையும் படிங்க: இந்திய ரசிகர்களை பற்றி ஏளனமா பேசுறவங்களுக்கு ஏன் அது கிடைக்கல.. கமின்ஸ் போன்றவர்களை விளாசிய கவாஸ்கர்
“ஆனால் உண்மையில் அவர்களை உங்களால் ஒப்பிட முடியாது. இருவரும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒன்றாக தெரிந்தாலும் வித்தியாசமானவர்கள். எனவே அவர்களில் ஒரு சிறந்த கேப்டனை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் ரோஹித்தை விட தோனி சேர்ந்தவர் அல்லது தோனியை விட ரோஹித் சிறந்தவர் என்று சொல்வது நியாயமற்றது” எனக் கூறினார்.