ஏற்கனவே அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது 6.75 கோடிக்கு தேவையில்லாத வீரரை வாங்கிய சி.எஸ்.கே – விவரம் இதோ

auction-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2020ஆம் ஆண்டு பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த மாதம் 19ம் தேதி இன்று துவங்க உள்ளது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Csk

- Advertisement -

இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் சென்னை அணியம் கலந்துகொண்டது. இந்த ஏலத்தில் சென்னை சி.எஸ்.கே அணி முதல் வீரராக இங்கிலாந்து வீரரான சாம் கரணை 5.50 கோடிக்கு வாங்கியது. அதன்பின்னர் தற்போது இரண்டாவது வீரரையும் சென்னை அணி தற்போது வாங்கியுள்ளது.

அதன்படி இந்திய அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கு வாங்கியுள்ளது. சென்னை அணியின் இந்த தேர்வு தேவையற்றது என்றே கூறலாம். ஏனெனில் சென்னை அணியில் ஏற்கனவே ஹர்பஜன், தாஹிர், கரண் சர்மா மற்றும் மிட்சல் சான்டனர் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்க இவரை தேவையில்லாமல் சென்னை அணி வாங்கியிருக்கிறது என்றே கூறலாம்.

piyush

சாவ்லாவிற்கு பதிலாக இந்திய அணியின் மற்ற வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் காயம் காரணமாக முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தவிக்கும் சென்னை அணிக்கு மேலும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால் சாவ்லாவிற்கு பதிலாக நல்ல வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Advertisement