தேவையில்லாத வீரரை விலைக்கு வாங்கிய சி.எஸ்.கே கேப்டன் தோனி – அவரோட லாஜிக் வொர்க் ஆகுமா ?

Dhoni

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் பதிமூன்றாவது சீசன் இந்த ஆண்டு நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்க பட்டு தற்போது மீண்டும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Ipl cup

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று முடிந்த நிலையில் புதிய வீரர்களாக பல அணிகளும் பல வீரர்களை ஏலத்தில் எடுத்தது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் தற்போது சென்னை அணிக்கு தேர்வான தான் யாரால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பது குறித்து தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக சென்னையில் நாங்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போது தோனி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.

Chawla

என்னை ஏன் ஏலத்தில் எடுக்க முற்படுகிறீர்கள் என்று நான் கேட்டேன். மேலும் யார் என்னை சென்னை அணியில் எடுக்க முடிவு செய்தது என்றும் நான் தோனியிடம் கேட்டேன். அதற்கு தோனி என்னிடம் கண்டிப்பாக நான் தான் அந்த முடிவை எடுத்தேன் என்று கூறினார். மேலும் அவர் தான் என்னை சென்னை அணியில் எடுக்க அணி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார் என்றும் என்னிடம் சொன்னார்.

- Advertisement -

இந்த உண்மையை நான் இப்போது சொல்கிறேன் என்று சாவ்லா வெளிப்படுத்தினார். 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிக்காக விளையாடி உள்ளார். இதுவரை கொல்கத்தா அணிக்காக 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 157 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஏற்கனவே சி.எஸ்.கே அணியில் ஹர்பஜன், இம்ரான் தாஹிர், ஜடேஜா, கரண் சர்மா ஆகியோர் இருப்பதால் சாவ்லாவின் தேர்வு தேவையில்லாத ஒன்று என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இருப்பினும் தோனி எது பண்ணாலும் ஒரு அர்த்தம் இருக்கும் என்று கூறும் சிலர் இந்த லாஜிக் பலிக்குமா ? பார்க்கலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.