இந்திய டெஸ்ட் தொடரில் இவர்கள் மூவரும் நிச்சயம் ஆடியிருக்க வேண்டும் – பீட்டர்சன் காட்டம்

Pieterson-1
- Advertisement -

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

pant

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலும், இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியலும் இருநாட்டு கிரிக்கெட் சங்கங்களும் ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர், இந்நிலையில் வலுவான இந்திய அணிக்கு எதிரான சொத்தையான இங்கிலாந்து அணியை தேர்வு செய்ததற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவை அந்நாட்டு முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்.

broad

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இங்கிலாந்து ரசிகர்களுக்கும் அவமரியாதையை கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து டுவிட்டர் மூலமாக கருத்தை பதிவிட்டுள்ள பீட்டர்சன் : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு சிறந்த அணியை இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தேர்வு செய்துள்ளதா என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் பெறுகிற வெற்றி என்பது ஆஸ்திரேலிய மண்ணில் பெறுகின்ற வெற்றிக்கு நிகரானது.

இந்த மோசமான அணியின் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் நிச்சயம் இங்கிலாந்து அணிக்காக பேர்ஸ்டோ விளையாடி இருக்க வேண்டும். அதே போன்று ஆண்டர்சன் மற்றும் பிராட் ஆகியோர் விளையாடி இருக்க வேண்டும். சிறந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் அவர்களை தேர்வு செய்யாமல் சாதாரண அணியை தேர்வு செய்துள்ளதாக பீட்டர்சன் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement