இந்திய அணியில் இருக்கும் அவரைப்போன்ற ஒருவீரர் இங்கிலாந்து அணிக்கு தேவை – பீட்டர்சன் ஓபன்டாக்

Pieterson-1
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கும் அந்த அணியானது, இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் கிரிக்கெட்டில் புகழ்பெற்ற தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் பங்கு பெற இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களும் இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான தொடர்களாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணியில் உள்ள குறையை சுட்டிக் காட்டி பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், இந்த இரண்டு தொடர்களுக்கு முன்னாதாகவே இங்கிலாந்து அணியானது அந்த குறையை போக்கிக் கொள்ள வேண்டுமென்றும், அதற்கு இந்திய அணியில் உள்ள ரவீந்திர ஜடேஜைப் போன்ற ஒரு வீரரை இங்கிலாந்து அணி விரைவிலேயே கண்டுபிடிக்க வேண்டுமென்றும் பேசியுள்ளார். இது குறித்து அந்த அணிக்கு அறிவுரை வழங்கிய அவர்,

ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டில் உண்மையாகவே ஒரு சூப்பர் ஸ்டார். அவரைப்போன்று அற்புதமாக பேட்டிங் விளையாடக்கூடிய இடதுகை சுழற்பந்து வீச்சாளரை இங்கிலாந்து அணி நிச்சயமாக கண்டுபிடிக்க வேண்டும். மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் அவரைப் போன்ற ஒரு வீரர் விலைமதிப்பற்றவாரகத் தான் இருப்பார். ஜடேஜாவைப் போன்று சர்வதேச கிரிக்கெட்டில் இடதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் அதே சமயம் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடும் ஒரு வீரர் இதுவரை இங்கிலாந்து அணிக்கு கிடைக்காதது, பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது என்று கூறினார்.

jadeja

மேலும் தொடர்ந்து பேசிய அவர், இங்கிலாந்து அணி விரைவிலேயே ஜடேஜேவைப் போன்ற ஒரு வீரரை கண்டுபிடித்து, அவரின் திறமைகளை வளர்க்க வேண்டும். இல்லையெனில் இங்கிலாந்து அணியானது கடைசிவரை அந்த இடத்தில் வலுவற்றதாகவே காணப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Eng-bess

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி தொடங்க இருக்கிறது. அந்த தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.

Advertisement