இவர்கள் இருவரும் ஓய்வு அறிவிச்சிட்டா இங்கிலாந்து அணி அவ்ளோதான் – பீட்டர்சன் வருத்தம்

Kevin
- Advertisement -

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டின் தயாகமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விரும்பி பார்க்கப்படும். ஆனால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அந்த மக்களும் கிரிக்கெட் வாரியமும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

England

- Advertisement -

இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக வேகப்பந்துவீச்சில் சிறந்த ஜோடியாக கடந்த 10 வருடங்களாக ஜொலித்து வருபவர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் . இந்த இரண்டு பந்து வீச்சாளர்களும் இணைந்து கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்து அணியின் தூண்களாக இருக்கின்றனர். இதில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 36 வயதாகிறது .ஸ்டூவர்ட் பிராடிற்கு 33 வயதாகிறது. இவ்வாறு இருக்கையில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் இருவரும் ஓய்வு பெற்று விடுவார்கள்.

இவர்களுக்கு மாற்று வீரர்களை தேட வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்ளது. இந்நிலையில் இது குறித்து கெவின் பீட்டர்சன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் இங்கிலாந்து அணியில் இருந்து செல்வது குறித்து எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் உள்ளனர். அவர்கள் நிரப்பிய அந்த பெரும் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் .

Eng

அந்த இடைவெளியை நிரப்ப போகிறார்கள் என்று தெரியவில்லை அந்த அளவிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது சந்தேகம்தான் என்று தெரிவித்துள்ளார் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்மை பந்துவீச்சாளர்கள் ஆக இருக்கும் இரு வீரர்களும் கிட்டத்தட்ட 400 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.

Anderson

மற்ற கிரிக்கெட் அணிகளை போலல்லாது இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்தன்மை வாய்ந்த வீரர்களாகவும் அந்த ஒரு வடிவத்தை மட்டும் ஆடுபவர்களாகவுகம் கடந்த பல வருடங்களாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களின் ஓய்வுக்கு பிறகு நிச்சயம் அந்த இடத்தில் வெற்றிடம் ஏற்படுவது உறுதி.

Advertisement