ஐ.பி.எல் தொடர் நடக்கும்போது இதெல்லாம் தேவையா ? ப்ளீஸ் நான் சொல்ற கேளுங்க – பீட்டர்சன் வேண்டுகோள்

Pietersen
- Advertisement -

இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் துவங்குகிறது. மே மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மிகப்பெரிய தொடரானது முதலில் சென்னை மைதானத்தில் துவங்கி மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி என ஆறு நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர்பாக அனைத்து அணி வீரர்களும் தற்போது ஒவ்வொரு மைதானத்திலும் முகாமிட்டு தங்களது பயிற்சியை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

ipl

- Advertisement -

இந்நேரத்தில் ஐபிஎல் தொடர் குறித்த பல்வேறு கருத்துகளை பல்வேறு முன்னாள் வீரர்கள், நிபுணர்கள் என அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐபிஎல் தொடர் குறித்த சில கருத்துக்களை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஐபிஎல் நடைபெறும்போது சர்வதேச போட்டிகளை நடத்த வேண்டாம் என்று ஒரு கருத்தினை விளக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இரு நாடுகளுக்கு இடையேயான தொடரை ஐ.பி.எல் தொடர் நடைபெறும் போது நடத்தக் கூடாது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களில் வீரர்களால் அந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போகும் அல்லது தாய் நாட்டிற்காக விளையாடுவதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

bairstow

இதன் காரணமாக ஐபிஎல் தொடர் நடைபெறும் போது எந்தவித சர்வதேச போட்டிகளை நடத்த வேண்டாம். ஐபிஎல் கிரிக்கெட் என்பது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா போன்று நடத்தப்படுகிறது. எனவே இது போன்ற தொடர் நடைபெறும் காலகட்டங்களில் சர்வதேச தொடர்களை எதுவும் நடத்த வேண்டாம் என கிரிக்கெட் வாரியங்கள் உணரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Morgan

இந்த ஐபிஎல் தொடரில் 14 இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகிறார்கள். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் சில வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடலாமா ? வேண்டாமா ? என்று தவித்து வருகிறார்கள் ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகமோ ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஆக வேண்டும் என்று தாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம் என தெளிவாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement