தோனி ரன்அவுட் ஆனதும் அழுத போட்டோகிராபர் – அதன் உண்மை காரணம் இதுதான்

Dhoni
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் கடைசி வரை இந்திய அணியின் வெற்றிக்காக போராடிய தோனி 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

Dhoni-2

- Advertisement -

பரபரப்பான இந்த இறுதிக்கட்டத்தில் தோனி இருந்திருந்தால் வெற்றி இலக்கை அடைந்து இருக்க முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரன் அவுட் தோனி அழுதபடி வெளியேறிய வீடியோ சமீபத்தில் வளைதளம் இணையதளங்களில் வெளியானது.

அதுமட்டுமின்றி இப்போது ஒரு புதிய போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அது யாதெனில் தோனி அவுட் ஆனதை பார்த்த புகைப்படக் கலைஞர் கண்ணீர் விட்டு அழுத தாகக் கூறி ஒரு புகைப்படம் தற்போது வைரல் ஆகிறது. ஆனால் அதன் பின்னே நாங்கள் ஆராய்ந்து செய்து பார்த்தபோது அவர் இந்த கிரிக்கெட் போட்டியை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் கிடையாது என்றும் அவர் ஈராக்கைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர் பெயர் முகமது அசாவி என்று தெரியவந்துள்ளது. அவர் டோனியின் புகைப்படம் எடுக்கும் போது கண்கள் கலங்கவில்லை என்றும் இது வேறு ஏதோ ஒரு இடத்தில் போட்டோ எடுக்கும் போது அவர் கண் கலங்கிய போட்டோவும், தோனி ரன் அவுட் ஆன இரண்டையும் இணைத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி விடப்பட்ட ஒரு போலியான தகவல் என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement