என்ன தார்பாய்க்குள்ள போய் பந்தை தேடுறாரு. மைதானத்தில் நடந்த காமெடி – வீடியோ இதோ

Ball
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது மூன்றாவது நாளாக விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் பொழுது நடந்த சம்பவமொன்று ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

அதன்படி இந்திய அணி வீரர் அடித்த பந்து பவுண்டரி சென்றது. பவுண்டரி லைனுக்கு சென்ற அந்த பந்து விளம்பர அட்டை படத்தின் இடையே சிக்கிக் கொண்டது. ஆனால் பந்து அதனை தாண்டிவிட்டது என்று நினைத்த தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் பிலாண்டர் பந்தை மைதான காப்பாளர்கள் உதவியுடன் தார்ப்பாய் தூக்கி தேடிக்கொண்டிருந்தார்.

ஆனால் கேமராவில் பந்து விளம்பர தடுப்புக்கு மத்தியில் இருந்தது தெரியவந்தது. இதனை பெரிய திரையில் காண்பிக்க மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் ஓடிவந்து அந்த பந்தை எடுத்துக் கொண்டு திரும்பி சென்றார். இதனை கண்ட ரசிகர்கள் பந்து இங்க இருக்கு எங்கயோ தேடிக்கொண்டு இருக்கிறார் என்பது போல நினைத்து சிரிப்பலையில் அரங்கத்தை அதிர விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement