லைட் போட்டதும் மொத்தமா மாறிடுச்சு.. கம்பீர் இருப்பது கிரேட்.. லக்னோவை வீழ்த்திய ஆட்டநாயகன் சால்ட் பேட்டி

Phil Salt 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற 28வது லீக் போட்டியில் லக்னோவை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ தடுமாற்றமாக விளையாடி 162 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 45, கேப்டன் கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த கொல்கத்தாவுக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக 14 பவுண்டரி 3 சிக்சருடன் 89* (47) ரன்களை 189.36 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி 15.4 ஓவரிலேயே வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

ஆட்டநாயகன் சால்ட்:
அதனால் மோசின் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் லக்னோ தோல்வியை சந்தித்தது. மறுபுறம் லக்னோவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு ஐபிஎல் போட்டியில் வென்று சாதனை படைத்த கொல்கத்தாவின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பில் சால்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் மாலை நேரத்தில் ராட்சத மின் விளக்குகள் எரியத் துவங்கியதும் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக மாறியதாக பில் சால்ட் கூறியுள்ளார்.

அத்துடன் இந்தியாவில் கௌதம் கம்பீர் போன்ற பயிற்சியாளர்களுடன் இணைந்து ஐபிஎல் தொடரில் மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “போட்டி துவங்குவதற்கு முன்பாக கிரேம் ஸ்வானியிடம் நான் (வெயிலால்) உருகுவதாக சொன்னேன். இருப்பினும் களத்தில் ஸ்ரேயாஸ் என்னைத் தொடர்ந்து வேலை செய்ய வைத்தார். சொந்த மண்ணில் மற்றுமொரு வெற்றியை பெற்றது நல்லது”

- Advertisement -

“லைட்ஸ் வருவதற்கு முன்பாக பிட்ச் சற்று மெதுவாக இருந்தது போல் உணர்ந்தேன். ஆனால் அது வந்ததும் லேசாக ஈரப்பதம் அதிகமானதால் பந்து வழுக்குவதற்கு அனுமதித்தது. எனவே எங்களுடைய இன்னிங்ஸில் பேட்டிங் சற்று நன்றாக அமைந்தது. இந்தியாவில் கொல்கத்தா போன்ற மைதானங்கள் எங்களுடைய நாட்டில் இருக்கும் மைதானங்களைப் போலவே உள்ளது”

இதையும் படிங்க: 3 கேட்ச் ட்ராப்.. 1 பந்தில் 15 ரன்ஸ்.. சோகமான வினோத சாதனை படைத்த காபா ஹீரோ சமர் ஜோசப்

“அதில் பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆகிறது. இங்குள்ள பிட்ச்சை மிகவும் விரும்பினேன். எங்கள் அணியில் சில மகத்தான வெளிநாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் உள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் விளையாடுவது நல்லது. கௌதம் கம்பீர் பயிற்சியாளர் குழுவுக்கு வந்துள்ளது சிறப்பானது. இந்த சூழ்நிலையில் நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன்” என்று கூறினார்.

Advertisement