ஐ.பி.எல் தொடரில் ஏலம் போகாத தமிழக மலிங்கா. வறுமையில் வாடும் சோகம் – விவரம் இதோ

Periyasami
- Advertisement -

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா போன்று வித்தியாசமான பௌலிங் ஆக்சன் மற்றும் நேர்த்தியான, துல்லியமான பந்துவீச்சு என நடந்து முடிந்த டிஎன்பிஎல் தொடரில் அசத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் 25 வயதான இளம் வீரர் பெரியசாமி. நடைபெற்று முடிந்த டிஎன்பிஎல் தொடரில் இவர் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்காக விளையாடினார்.

periyasami 1

- Advertisement -

பிறவியிலேயே தனது வலது கண்ணில் பார்வை குறைபாடு இருக்கும் இவர் ஒரு கண் மட்டுமே செய்லபடும் இருப்பினும் இந்த தொடர் முழுவதும் அவர் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தேச விளக்கு என்ற கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி ஏற்கனவே அதே மாவட்டத்தில் இருந்து சென்னை தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் நட்ராஜ் என்கிற வேகப்பந்து வீச்சாளர்களின் கண்டுபிடிப்பாகும். நட்ராஜ் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் உள்ளவர். அவரின் வழிகாட்டுதலின்படி தற்போது பெரியசாமி டிஎன்பிஎல் தொடரில் ஜொலித்தார். இதனால் அவர் நிச்சயம் ஐபிஎல் தொடரில் ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

periyasami 2

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பெரியசாமி பெயர் இருந்தும் யாரும் இவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாததால் அவர் விற்கப்படாமல் போனார். வறுமையில் வாடும் இவர் தனது முயற்சியை சற்றும் தவறவிடாமல் தற்போது விசைத்தறி தொழில் செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது கிரிக்கெட் பயிற்சிகளும் தொடர்ந்து வருகிறார். வாய்ப்பில்லாததால் திறமையான அவர் தற்போது வறுமையின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement