நீங்க விமர்சித்தால் நாங்க ஒன்னும் பண்ணமுடியாது – விராட் கோலி பற்றி ராகுல் டிராவிட் பேசியது இதோ

Dravid
Advertisement

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பை லீக் சுற்றை கடந்து சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளை லீக் சுற்றில் தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்பதற்கு நிகராக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய அளவில் ரன்களை எடுத்து பார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஏனெனில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அவரை அணியிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளார்கள்.

VIrat Kohli IND vs HK

அதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஒரு மாதம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ள அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் 35 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய போதிலும் அதை 34 பந்துகளில் எடுத்து மெதுவாக விளையாடியதால் மீண்டும் விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் ஹாங்காங் அணிக்கு எதிரான 2வது போட்டியில் தடுமாறாமல் 59* (44) ரன்களை 130க்கும் மேற்பட்ட நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் பார்முக்கு திரும்பியதைப்போல் சிறப்பாக பேட்டிங் செய்தது ரசிகர்களை மகிழ வைத்தது.

- Advertisement -

தொடரும் விமர்சனங்கள்:
ஆனாலும் ஹாங்காங் போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக தரமற்ற பந்து வீச்சை எதிர்கொண்டு எடுத்த 60 ரன்களை வைத்து பார்முக்கு வந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று கௌதம் கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்கள் மீண்டும் விமர்சித்தனர். இருப்பினும் இதே இன்னிங்ஸ் போல 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்றாலும் 50, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்து வரும் அவர் அந்த காலகட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்திய வீரர்களின் பட்டியலில் இப்போதும் இருக்கிறார்.

Gautam-Gambhir-and-Virat-Kohli

ஆனாலும் சதமடித்தால் தான் முழுமையான பார்முக்கு திரும்பினார் என அனைவரும் ஒப்புக் கொள்ளும் நிலைமைக்கு வந்துள்ளார்கள். அந்தளவுக்கு அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக நிறைய போட்டிகளில் களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தங்கமான தரத்தை உருவாக்கி வைத்துள்ளதே இந்த அத்தனை விமர்சனங்களுக்கும் காரணமாகியுள்ளது. ஆனாலும் அவரது அனுபவத்தையும் திறமையையும் அருமையையும் உணர்ந்த நிறைய வெளிநாட்டவர்களும் இந்திய அணி நிர்வாகமும் தொடர்ந்து அவருக்கு தேவையான ஆதரவை அளித்து வருகிறது.

- Advertisement -

டிராவிட் ஆதரவு:
இந்நிலையில் ஆசிய கோப்பையில் விராட் கோலியின் செயல்பாடுகளால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவிக்கும் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நீங்கள் விமர்சிப்பதற்காக அணி நிர்வாகம் எதுவும் செய்ய முடியாது என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அணிக்கு வெளியில் இருக்கும் அனைவரும் சதத்தையும் புள்ளிவிவரங்களையும் மட்டுமே பார்க்கிறார்களே தவிர வெற்றிக்கு பங்காற்ற கூடிய 35, 59* போன்ற அவரது ரன்களை யாருமே பார்ப்பதில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது பின்வருமாறு.

Dravid

“அவர் புத்துணர்ச்சியுடன் அணிக்கு திரும்பியுள்ளதை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். அந்த வகையில் அவரது செயல்பாடுகள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்களைப் பொறுத்தவரை அவர் எவ்வளவு ரன்கள் அடிக்கிறார் என்பது முக்கியமல்ல. குறிப்பாக விராட் கோலியின் விஷயத்தில் அனைவரும் புள்ளி விவரங்கள் மற்றும் நம்பர்களை (சதம்) மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் எங்களுக்கு அது முக்கியமல்ல”

- Advertisement -

“எங்களைப் பொறுத்தவரை போட்டியின் அழுத்தமான பல்வேறு சூழ்நிலைகளில் அவர் எப்படி விளையாடி வெற்றி பங்காற்றுகிறார் என்பதே முக்கியம். அந்த பங்கானது அரை சதம் அல்லது சதம் என்பதைப் பொருத்தது கிடையாது. டி20 கிரிக்கெட்டில் ஒரு சிறிய பங்கு கூட பெரிய அளவில் உதவும். ஒரு அணிக்கு தேவைகேற்ப ஒரு வீரர் சிறப்பாக செயல்படுவதே முக்கியம். அந்த வகையில் விராட் கோலி பெரிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதை இந்த தொடரில் அவர் தொடர்ந்து செய்வார் என்று நம்புகிறோம்” என கூறினார்.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

அதாவது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களை போல் விராட் கோலி சதமடிப்பார் என்பதை அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கும் ராகுல் டிராவிட் அழுத்தமான சூழ்நிலையை சமாளித்து குறைவான ரன்கள் எடுத்து வெற்றி பங்காற்றுவதே தங்களுக்கு போதும் என்ற வகையில் மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளார்.

Advertisement