இந்திய வீரர்களை பத்தி அப்படி பேசக்கூடாது. தோனி குறித்து பேசிய பாக் வீரரை எச்சரித்த பாக் கிரிக்கெட் வாரியம் – விவரம் இதோ

Mushtaq

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன.

Dhoni

அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரரான சக்லைன் முஷ்டாக் தோனிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது : நான் இதை சொல்லியே ஆகவேண்டும் என நினைக்கிறேன். தோனி மாதிரியான ஒரு பெரிய வீரருக்கு முறையான ஃபேர்வெல் மேட்ச் நடத்தாதது பிசிசிஐயின் தோல்வி.

இது என் நெஞ்சில் இருந்து நேராக வரும் வார்த்தைகள் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் என்ற எண்ணம் தோன்றும் என நம்புகிறேன். தோனிக்கு முறையான செண்ட் ஆப் கொடுக்காதது என் மனதில் காயத்தை ஏற்படுத்தி உள்ளது என சக்லட் முஸ்டாக் அந்த வீடியோவில் கூறியிருந்தார் .

Mushtaq

இந்நிலையில் முஸ்டாக் கூறிய இந்த கருத்துக்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு முரண்பட்ட நிலையில் இருப்பதாகவும் இந்திய வீரர்கள் குறித்து இனி கருத்துக்கள் தெரிவிக்க வேண்டாம் என்றும் அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது. அதோடு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் என அனைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

Mushtaq-3

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எனவும் எடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.